திருச்சியில் கூண்டோடு களைந்து மநீம ; கமல் தான் காரணம் முருகானந்தம் குற்றச்சாட்டு !
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மக்கள் நீதி மையத்தின் சார்பு மற்றும் அமைப்பு பிரிவின் பொதுச் செயலாளர் எம் எம் எம் முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் மாற்று என்று சொல்லிக்கொண்டு களமிறங்கியது கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம். மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன், துணை தலைவர் மகேந்திரனுக்கு அடுத்த இடத்தில் திருச்சி திருவரம்பூர் சேர்ந்த முருகானந்தம் இருந்தார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு டெல்டா பகுதிகளில் மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து மக்கள் நீதி மய்யத்தை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு முருகானந்தத்தை சேரும்.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் களமிறங்கிய எம் எம் எம் முருகானந்தம் தோல்வியை சந்தித்தார். ஆனாலும் தொகுதி முழுக்க முருகானந்தத்தின் பெயர்கள் பேசப்பட்டதை பார்க்க முடிந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம், இதைத்தொடர்ந்து தேல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்க உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் உடனடியாக துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார்.
மேலும் பல்வேறு நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று ( மே 19 ) திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எம் எம் எம் முருகானந்தம் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது, மக்கள் நீதி மய்யத்தின் அமைப்பு மற்றும் சார்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன். நமது கட்சி என்ற எண்ணத்தோடு சேர்ந்த எனக்கு கடைசியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கமலஹாசன் இது எனது கட்சி என்று அறிவித்தார்.
மேலும் கட்சியில் ஜனநாயகம் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றது. முற்றிலும் ஜனநாயகம் மறுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் மாறிவிட்டது.
மேலும் மிகவும் பலவீனமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கிறார் கமலஹாசன். 100க்கும் மேற்பட்ட சீட்டுகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி மிகப்பெரிய தோல்விக்கு வழிவகுத்தவர் கமலஹாசன் தான்.
கட்சியில் சமத்துவம், ஜனநாயகம் என்ற எதுவும் இல்லை, உயர்மட்டக்குழு கூட்டத்தில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் கமலஹாசன் பதில் அளிக்கவில்லை. மேலும் மற்ற நிர்வாகிகள் கேட்ட கேள்விக்கும் கமல்ஹாசனால் பதிலளிக்க முடியவில்லை.
பல சமயங்களில் கமலஹாசனிடம் பல குற்றச்சாட்டுகளை கூறியும் அவர் அதை சரி செய்து கொள்ளவில்லை. மேலும் சங்கையா சொல்யூஷனோடு தேர்தல் வியூகம் ஒப்பந்தம் செய்து கொண்டு களத்தில் இறங்கிய கமலஹாசன். உயர் மட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை புறக்கணித்து விட்டார்.
மேலும் சொல்லப்போனால் சங்கையா சொல்யூஷன் தேர்தல் வியூகத்தில் மட்டும் தலையிடாமல், கட்சியின் உயர்மட்ட விவகாரங்களிலும் தலையிட தொடங்கிவிட்டது. இதற்கு முழு காரணமும், காரணகர்த்தாவாக இருக்கக்கூடிய கமலஹாசனையே சேரும்.
கமலஹாசனுக்கு அரசியல் காசும் இல்லை, கோலும் இல்லை. இதனால்தான் அரசியலில் தவறான முடிவுகளை எடுத்திருக்கிறார். இந்த முடிவுக்கு தான் பொறுப்பு ஏற்காமல், நிர்வாகிகளை ராஜினாமா செய்ய சொல்லி இருப்பது நிர்வாகிகளின் தன்மானத்தை பாதித்துள்ளது.

மேலும் முதல்வர் பட்டியலில் ஸ்டாலின், ஈபிஎஸ் இவர்களுக்கு அடுத்த இடத்தில் கமலஹாசன் இருந்தார். ஆனால் அதை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் கட்சியை வளர்ப்பதற்கான வாய்ப்பும் எந்த திட்டமும் கமலிடம் இல்லை.
இதனால் மக்களிடமும் எதிர்மறை எண்ணங்கள் வந்திருக்கிறது. கமலஹாசன் கூட்டணிக்கு சீட்டு ஒதுக்கியது, மக்களிடம் கேளிக்கையாக மாறியது. இவ்வாறு தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படும் கமலஹாசன் தலைமையிடம் இருந்து விடை பெறுகிறேன். இவ்வாறு கட்சியில் இருந்து நான் விளக்குகிறேன் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் எம் எம் எம் முருகானந்தத்தோடு 417 பூத் கமிட்டி நிர்வாகிகள் 200 பேர் மற்றும் 2200 கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் என்னோடு சேர்ந்து கட்சியிலிருந்து விளக்குகின்றனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் முருகானந்தம்.
அதோடு தேர்தல் தோல்விக்கு முழு காரணமும் கமலஹாசன் தான் என்றும் குற்றம் சாட்டினார்.