ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !
மதுரையில் நடிகர்கள் முன்னிலையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்…
சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் நடிகர்கள் மதுரை முத்து, கஞ்சா கருப்பு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு மலிவு உணவுகளை டாக்டர் சரவணன் வழங்கினார்கள். நாள்தோறும் நடமாடும் மலிவு விலை உணவகம் மதுரை நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று மலிவு விலை உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுவுள்ளது.
இதனையடுத்து சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் அளித்த பேட்டியில் “கூலிதொழிலாளர்களுக்காக மலிவு விலை உணவகத்தை தொடங்கி இருக்கிறோம். ரூ10க்கு 4இட்லி அல்லது 3 இட்லி 1 டீ என விலை மலிவாக உணவு வழங்கப்படுகின்றது.
என் குடும்பம் உணவுக்காக பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளது. உணவின் அருமை எனக்கு தெரியும் அதனால் தொழிலாளர்களுக்காக இந்த மலிவு விலை உணவகத்தை தொடங்கி இருக்கிறேன். முதல் கட்டமாக தொழிலாளர்கள் கூடுமிடங்களில் காலை உணவு வழங்கப்படுகின்றது. தொழிலாளர்களின் வரவேற்பை அடுத்து மாலை நேரங்களில் உணவகத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்” என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.