கழிவுநீர் அகற்ற நவீன கருவி ! மதுரை மக்களின் நீண்டநாள் சிக்கலை தீர்க்க மாநகராட்சி முடிவு!
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளிலும் தினந்தோறும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீதி மற்றும் சாலைகளில் கழிவுநீர் தினந்தோறும் ஒடுகிறது. இதைபொதுமக்கள் வீதிகளில் செல்வோர் முகம் சுழித்து மதுரை மாநகராட்சிமேயர், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் ஊழியர்களை அப்பகுதி மக்கள் திட்டி தீர்த்து விடுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக மதுரை மாநகராட்சி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில்வெளியேறும் கழிவு நீரை சரி செய்வதற்காக நவீன தொழிற்நுட்பத்தில் இயங்கும் கருவியை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் மதுரை மாநகராட்சியினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார், மாநகராட்சி அதிகாரி நாகராஜ்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வரும் அடைப்பு எடுக்கும் நவீன ரக வாகனம் தமிழகத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நவீனரக வாகனத்தை பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள சாக்கடை அடைப்பை ஸ்கேனர் கேபிள் வயர் மூலம் கண்டறிந்து ரோபோட் கருவி பயன்பாட்டின் வழியே அடைப்பை நீக்க முடியும். என்கிறார். மதுரை மக்களின் நீண்ட நாள் சிக்கல் தீர்ந்தால் சரி.
— ஷாகுல் படங்கள் : ஆனந்தன்.