நவீன பூஜைக்கு ரோபோ மாடு வந்தாச்சு!
தமிழ்நாட்டுல ஒவ்வொரு நாளும் புதிய வைரல் வீடியோக்கள் போய்க்கொண்டே இருக்குது. ஆனா சில வீடியோக்கள் வந்த உடனே மக்களின் கவனத்தையும் சிரிப்பையும் ஒரே நேரத்தில் கவர்ந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் இப்போ எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கு “ரோபோ மாடு அபார்ட்மெண்ட் பூஜை!”
சாதாரணமாக புதிய வீடு கட்டினா அல்லது அபார்ட்மெண்ட் வாங்கினா, அதுக்கான “குடி புகு பூஜை” ஒரு பெரிய நிகழ்ச்சி தான். பூசாரி வருவார், வேதமந்திரங்கள் ஒலிக்கும், கோலம் போடுவாங்க, பால் பொங்கலுடன் பூஜை நடக்கும். ஆனால் இந்த வீடியோவில் நடந்தது சற்று வித்தியாசம். பூஜைக்கு ஒரு மாடு கொண்டு வரணும் . இது வழக்கமான பழக்கத்திலேயே வரும் விஷயம். ஆனால் இங்கு நிஜ மாடு இல்ல, அதற்குப் பதிலா சின்ன ரோபோ மாடு ஒன்று வந்தது! அழகா பளபளக்கும் மாலை, சிகப்பு பூக்கள் எல்லாம் போட்டு அதை அலங்கரிச்சு, பூஜைக்குள் அழைத்து வந்திருக்காங்க.
வீடியோவில் பூசாரி தங்கள் வேதமந்திரம் சொல்லிக்கொண்டு, பூஜை சாமான்களை ரெடியா வைச்சிருந்தார். அப்போது அந்த ரோபோ மாடு நடந்து வருது. அந்த காட்சி தான் முழு இணையத்தையும் கலக்கியிருக்கு.
கீழே பலரும் கமெண்ட் பண்ணுறாங்க:
டேய்!! எல்லாம் எல்லை மீறி போறீங்கடா!!!
இதெல்லாம் பாக்க நம்ம நடிகர் விவேக் இல்ல….
ஊர்ல இருக்குற மொத்த அறிவாளிகளும் நம்ப ஊர்ல தான் இருக்கான் பா….
“டெக்னாலஜியும், பழமை வழக்கமும் சேர்ந்த கலக்கல் கலாச்சாரம் இது!”
“இப்போ ரோபோ மாடு வந்தாச்சு, அடுத்தது ரோபோ பூசாரியா?”
இதுபோல் நீண்டு போகிறது comments மழை…
இந்த வீடியோவை முதலில் சில Instagram பக்கங்கள் போஸ்ட் பண்ணினா, அதை “OneIndia Tamil” மாதிரி பெரிய பக்கங்களும் ரீஷேர் பண்ணிட்டாங்க. சில மணி நேரத்துக்குள்ளேயே லட்சக்கணக்கான பார்வைகள், ஆயிரக்கணக்கான ரியாக்ஷன்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் குவிந்துவிட்டது.
பொதுவா மக்கள் இதை ஒரு கலகலப்பான விஷயம்னு ரசிச்சாங்க. ஆனா சிலர் இதை டெக்னாலஜியை சரியான வழியில் பயன்படுத்துற ஒரு நல்ல முயற்சியா பார்த்தாங்க. இந்த வீடியோ ஒரு சாதாரண நகைச்சுவை வீடியோ மாதிரி தோன்றலாம். ஆனா இதுக்குள் ஒரு ஆழமான செய்தி இருக்கு. நம்ம நாட்டின் மரபுகள், நம்பிக்கைகள் எல்லாம் இன்னும் நம் வாழ்க்கையோட கலந்துதான் இருக்குது. ஆனா அதே சமயம் நாம டெக்னாலஜியையும் விரும்புறோம், அதையும் சேர்த்து வாழறோம். ரோபோ மாடு வந்தது இதுக்கு ஒரு சின்ன சின்ன எடுத்துக்காட்டு மாதிரி தான். இது “நவீன வாழ்க்கை” நம்ம பழமையை மறக்க வைக்காது, அதுக்கு புதிய வடிவம் கொடுக்குது என்பதற்கே சாட்சி.
உண்மையில் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
டெக்னாலஜி ஒரு கருவி .அதை எப்படி பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம்.
மரபை காப்பது possible . புதுமையுடன் சேர்த்தாலே அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கும்.
சிரிப்பு & சிந்தனை – நம்ம நாட்டு மக்கள் எந்த விஷயத்தையும் கலாய்த்தாலும், அதிலிருந்து சிந்தனை வர வைப்பது தான் speciality…
“ரோபோ மாடு” பூஜை நிச்சயம் நம்மை சிரிக்க வைக்குது. ஆனா அதே சமயம் இது ஒரு பெரிய உண்மையையும் சொல்கிறது டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும், நம் நம்பிக்கைகள், மரபுகள் இன்னும் நம் இதயத்தில்தான் வாழ்கின்றன.
அடுத்தடுத்து என்ன வரும் தெரியல…. ஆனா நிச்சயம் சொல்லலாம், நம் மக்கள் எதை செய்தாலும் அதில் கலாச்சாரமும் கலைவாசனையும் கலந்திருக்கும்!
— மதுமிதா









Comments are closed, but trackbacks and pingbacks are open.