ஒற்றை தலைமைக்கு ஓகே சொன்ன மோடி ; ஷாக்கான சசிகலா!
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உள்கட்சி பூசல் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கும் உள்கட்சி பூசல் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையிலும் எடப்பாடி தனக்கு சாதகமான கொங்கு மண்டலத்திலும், மேற்கு மண்டலத்திலும் அதிமுகவை அதிக இடங்களில் வெற்றி பெற செய்து, அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு தான் உள்ளது என்று நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வாகி செயல்பட்டு வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு சாதகமான ஆட்களை மாவட்ட செயலாளராக நியமித்து இபிஎஸ் மாநிலம் முழுவதும் தனது அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்திருக்கிறார்.
ஆனாலும் இபிஎஸ் தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்த நிலையில், சசிகலாவும் “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது” போல தொலைபேசியில் உரையாடி தொடங்கிவிட்டார். இவை அனைத்தும் இபிஎஸ் க்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வந்தது. இவை அனைத்தையும் நானே சமாளித்து விடுவேன், ஆனால் டெல்லியில் ஆதரவைப் பெறாமல் இதையெல்லாம் செய்து விட்டால் திடீரென்று லாக் செய்து விடுவார்கள் என்று இவையெல்லாம் யோசித்த இபிஎஸ் டெல்லியின் ஆதரவைப் பெற முயற்சி எடுத்து வந்தார்.
இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே (அதாவது தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமரை சந்திப்பதற்கு முன்பாகவே) பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தார், ஆனால் நேரம் கிடைக்கவில்லை. இதை எடுத்து பிரதமர் என் மீது கோபத்தில் இருக்கிறார் போல் என்று எண்ணி, பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எடப்பாடியின் முக்கிய விசுவாசிகள் எடப்பாடியிடம் கூற, எடப்பாடி மும் அமைதியாக இருந்துவிட்டாராம்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திற்கு டெல்லியில் எம்பிகான வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிர்மன் பவன் அருகே உள்ள மீனா பவனில் ரவீந்திரநாத்திற்கு பங்களா டைப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டிற்கு குடும்பத்தோடு சென்ற ஒ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் பால் காய்ச்சி அங்கு குடியேறினர்.
இந்த நிலையில் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியையும் முன்னெடுத்தார், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து இன்று ஜூலை 26 நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஓ பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியதை கேட்ட எடப்பாடி கே பழனிச்சாமி நான் கேட்டு இல்லை என்று சொன்னவர்கள். ஒ. பன்னீர்செல்வத்திற்கு மட்டும் எப்படி நேரம் தந்தார்கள் என்ற கேள்வியோடு உடனே பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு “நான் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது ஒதுக்கவில்லை ஏன் என்று கேட்டு இருக்கிறார். உடனே பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்ன நீங்கள் தேதி கேட்டீர்களா என்று கூறியிருக்கின்றனர். அதற்கு எடப்பாடி ஒரு மாதத்திற்கு முன்னரே நேரம் கேட்டு உங்களை தொடர்பு கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் இந்த விஷயத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டாம். உங்களுக்கு நாளையே நேரம் ஒதுக்கப்படுகிறது என்று கூறி உடனடியாக டெல்லிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்”.
பிரதமரை தனியாக சந்திக்க திட்டமிட்ட பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடியும் வருகிறார் என்று பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிரதமர் அலுவலகம்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை 26) காலை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
காலை 11.10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நடந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், எடப்பாடியோடு தளவாய் சுந்தரம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது மோடியிடம் உள்கட்சி விவகாரத்தை எடுத்துக் கூற, ஒற்றைத் தலைமை என்பது சரி தான் அதற்கான வேலையை செய்யுங்கள், நீங்கள் சொல்லியதை செய்யுங்கள் என்று எடப்பாடிக்கு மோடி ஆதரவு தெரிவித்து விட்டாராம்.இதை அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ஓ பன்னீர்செல்வம் சோகத்தோடு விரும்பினாராம்.
பிறகு பிரதமருடன் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கோதாவரி-காவிரி இணைப்பு, மேகதாது பிரச்சினை குறித்து பிரதமரிடம் பேசியதாக எடப்பாடி செய்தியாளர்களிடம் கூறினார். அவருக்கு அருகே ஓ பன்னீர்செல்வம் மௌனமாக நின்றார்.
மேலும் பிரதமருடனான சந்திப்பில் சசிகலா குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லையாம். அதோடு ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் அவைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எடப்பாடி தரப்பினரிடமிருந்து செய்திகள் வருகிறது.
இபிஎஸ் ஓபிஎஸ் உடனான சந்திப்பில் பிரதமர் என்னைப் பற்றி பேசுவார். இன்று எதிர்பார்த்துக் காத்திருந்த சசிகலாவிற்கு சந்திப்பிற்கு பிறகு கிடைத்த தகவல்கள் சாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.