தமிழக கலெக்டர்கள் பெயரில் தில்லாலங்கடி செய்த பெண் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தஞ்சாவூர் கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற குப்பலைச் சேர்ந்த தில்லாலங்கடி பெண்ணை ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனினும், இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான அப்பெண்ணின் கணவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தஞ்சாவூரைச்;; சேர்ந்த பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் சிலரை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஃபோனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர், அவர்களை ஒரு சில அரசு திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், மேற்படி திட்டத்திற்காக தலா ரூ50,000 அனுப்புமாறும் கூறி மேற்படி நபர்களுக்கு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பியுள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுபற்றி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மேற்படி நபர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு மொபைல் எண்கள், ஒரு வங்கி கணக்கு எண் ஆகியவற்றை போலீஸாரிடம் கொடுத்த மாவட்ட ஆட்சியர், இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பூர்வாங்க விசாரணையில் அது கோயம்புத்தூர் ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவரின் வங்கிக் கணக்கு என்பதும், அதே பகுதியில் உள்ள கனராவங்கி கிளையைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அத் தனிப்படை போலீஸார் கோயம்புத்தூருக்கு விரைந்து ரெஜினாவை பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட ரெஜினா அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும், மோசடி கும்பலால் அவர் இச்சம்பவத்தில் பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

போலீஸாரின் தொடர் புலன் விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (எ) சந்தான பாரதி (41) மற்றும் அவரது மனைவி ரீட்டா பபியா (50) என்பது தெரிய வந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதைத் தொடர்;ந்து, ரீட்டா பபியாவை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து, அவரை ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சியில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது கணவர் சந்தான பாரதியை பிடிக்க முடியவில்லை.

ரீட்டா பபியாவை விசாரித்த போலீஸார் அவர் கூறிய தில்லாலங்கடி கதைகளை கேட்டு மயங்கி விழாத குறைதான்.

ரீட்டாவும் அவரது கணவர் சந்தான பாரதியும் சேர்ந்து திருச்சி, நாமக்கல், வேலூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களின் பெயரை பயன்படுத்தி அம்மாவட்டங்களில் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பதும், சந்தான பாரதி ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இத் தில்லாலங்கடி தம்பதியினர் பணம் பறிக்கும் பாணியே தனி.

“தங்களது கைவரிசையை காட்ட முடிவு செய்யும் ஊரை தேர்ந்தெடுத்து அந்த ஊருக்கு சந்தான பாரதி மட்டும் தனியாக சென்று வாடகைக்கு வீடு பிடித்து தங்குவார். அதன் பின்னர் அந்த ஊரைச் சேர்ந்த யாராவது ஒரு போதை ஆசாமிக்கு தினமும் தண்ணி வாங்கிக் கொடுத்து அவருடன் நெருங்கிப் பழகி ‘தனக்கு குடும்பம் எதுவும் இல்லை’ எனக்கூறி அந்த போதை ஆசாமியின் பெயர் மற்றும் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ‘சிம் கார்டு’ வாங்கிடுவார்.

அதன் பின்னர், சந்தான் பாரதி அந்த ஊரில் உள்ள பியூட்டி பார்லர் நடத்திவரும் பெண்களை மொபைலில் தொடர்பு கொண்டு தான் சினிமா படக்கம்பெனியைச் சேர்ந்தவர் எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டு, ‘அடுத்த மாதம் உங்க ஊரில் சினிமா படபிடிப்பு நடைபெற உள்ளது. எங்க கம்பெனி ஆர்ட்டிஸ்டுகளுக்கு நீங்கதான் ஒப்பனை செய்ய வேண்டும்’ எனக்கூறி அதற்கான கட்டணம் எவ்வளவு எனக்கேட்பார். அக் முன்பணமாக ரூ20,000 அப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு தற்போது அனுப்புவதாகக் கூறி அப் பெண்ணின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வார் சந்தான பாரதி. அதன் பின்னர், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு அம் மாவட்ட கலெக்டர் அல்லது கலெக்டரின் உதவியாளர் பேசுவதாகவும், அரசின் திட்டத்திற்கு ரூ50,000 நிதி வழங்குமாறும் கூறி ஏதாவது ஒரு அழகுக்கiலை நிபுணரின் வங்கி சேமிப்பு கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி அந்த வங்கி கணக்கிற்கு அத் தொகையை அனுப்புமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிடுவார்.

கலெக்டரே ஃபோனில் பேசிவிட்டதாக நினைத்து சந்தோசமடைந்து சந்தான பாரதி அனுப்பிய வங்கி கணக்கிற்கு அவர் கேட்ட தொகையை அனுப்பி வைத்துள்ளனர் தொழிலதிபர்கள்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொழிலதிபர்கள் அவ்வங்கி கணக்கிற்கு ரூ50,000 அல்லது ரூ1 லட்சம் அனுப்பி வைப்பாங்க. உடனே அந்த வங்கி எண்ணுக்குரிய பெண்ணை மீண்டும் தொடர்ப கொண்டு ரூ20,000க்கு பதிலாக தனது உதவியாளர் தவறுதலாக அதிக தொகை அனுப்பிவிட்டார் என்றும், அத் தொகையை நேரில் வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டு அப்பெண்ணை சந்தித்து அப்பெண்ணுக்குரிய தொகை போக மீதி தொகையை பெற்றுக்கொள்வார்.

இதே பாணியில் அவரும் அவரது மனைவியும் இணைந்து செயல்பட்டு பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரை தொடர்பு கொண்டு அப்போதைய வேலூர் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் பேசுவதாக அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பணம் அனுப்புமாறு கூறி ஏமாற்றி ரூ50,000 பறித்துள்ளார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அப்பள்ளி முதல்வரை தொடர்புகொண்டு மீண்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ரூ50,000 அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பள்ளி முதல்வர் இதுபற்றி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். கலெக்டரின் உத்தரவின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி சந்தானபாரதியை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் தடைச் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல இன்னொசென்ட் திவ்யா என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்தபோது அவர் பேசுவதுவோல் ரீட்டா பபியா ஃபோனில் பேசி ஒருசிலரிடம் பணம் பறித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய கரூர் மாவட்ட கலெக்டர் பெயரை பயன்படுத்தி சில தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளார் சந்தான பாரதி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.