மோகன்லாலின் ‘எம்புரான்’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் பிருத்திவிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள பான் இந்தியப் படமான ‘எம்புரான்’ படத்தின் அதிரடி  டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  இந்த டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள இந்திய சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த்… “எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும்  பிருத்திவிராஜின்  ‘எம்புரான்’ பட டிரெய்லரை கண்டு ரசித்தேன். மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற  கடவுள் ஆசிர்வதிக்கட்டும். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

Srirangam MLA palaniyandi birthday

டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார்
டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார்

‘லூசிபர்’ படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர்,  மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை  இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன்,  எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் ‘எம்புரானி’ல் பதில் இருக்கு.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள ‘எம்புரான்’,  வரும்  27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில்,  ஐந்து மொழிகளிலும் ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இயக்குநர் பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘எம்புரானை’ தமிழில் கோகுலம் ஃபிலிம்ஸ், கன்னடத்தில்  ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தெலுங்கில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், இந்தியில் ஏஏ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடுகிறது.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.