‘மூன்வாக்’ பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம்!
தனது சினிமா இசைப் பயணத்தில் முதல் முறையாக, ‘மூன்வாக்’ படத்தில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்தப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

ஜனவரி 04 -ஆம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மூன்வாக்’ படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மற்றும் ஏ.ஆர்.ரஹ் மான் பிறந்த நாள் விழா மறக்க முடியாத இசை இரவாக மாறியது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இயக்குநர் மனோஜ் என்.எஸ்., இப்படத்தை நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததுடன் மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்த மும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், ‘மூன்வாக்’ படத்தின் ஐந்து பாடல்களை யும் தொடர்ச்சியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை இசைக் கொண்டாட்டமாக மாற்றினார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரம்மாண்டமான 10 நிமிட நடன நிகழ்ச்சியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்தார்.
யோகி பாபு, இந்தப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்தார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.கே. கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் படக் குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மூன்வாக்’ 2026 மே மாதத்தில் ரிலீஸ் ஆகிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.