அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆசிரியர்களையும் புரோக்கர்களாக மாற்றிய கொடுமை ! மோசடி மன்னர்கள் – பாகம் 06

திருச்சியில் அடகு நகையை விற்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஊரே நம்மை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்த தருணத்தில், ஊரே திரண்டு போலீசு எஸ்.பி.யிடமும் கலெக்டரிடமும் வரிசைகட்டி தனக்கு எதிராக புகார் கொடுக்க கிளம்பியதை கண்டு திடுக்கிட்டுத்தான் போனார், குடுமியான்மலை ரவிச்சந்திரன்.

என்றைக்கு இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சங்கதி போகும் என்பதை அறியாதவர் அல்ல. ஆனாலும், இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கவில்லை.

https://www.livyashree.com/

கடந்த 2023 -வது வருஷம் ஜூன் மாசம் 11ஆம் தேதி பெரம்பலூர் எஸ்.பி ஆபீசில் 30-க்கும் மேற்பட்டோர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கொளத்தூர், காரை, முறுக்கங்குடி, கொளக்காநத்தம், கீழப்புலியூர், சாத்தானத்தம், பாப்பாங்கரை, அனுக்கூர், குடிகாடுன்னு சுற்று வட்டாரத்தை மக்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு கையில் ஆளுக்கொரு மனுவோடு நின்று கொண்டிருந்தார்கள்.

மோசடி மன்னர்கள் “ஒரு இலட்சம் கொடுத்தா… ஒரு கோடி தாரேன்னு சொன்னாங்க. நம்பி போட்டோம். வருஷம் பல ஆச்சு. கோடியெல்லாம் வேண்டாம். போட்ட காச கொடுத்தாலே போதும்.” என்பதுதான் அவர்களின் பொதுக்கோரிக்கையாக இருந்தது.

“சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையின் மேலான்மை இயக்குனர் ஏ.சி. ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் டேனியல் ஜான் கென்னடி, ஜோசப் பீட்டர், தன்ராஜ் அப்புறம் பெரம்பலூரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கணேசன் மற்றும் சசிக்குமார்” ஆகியோர்தான் தங்களை ஏமாற்றியதாக புகாரில் தெரிவித்திருந்தார்கள்.

வாத்தியாருக்கும் இங்கு என்ன வேலை? பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சொன்னா, குடுமியான்மலை ரவிச்சந்திரனுக்கு புரோக்கர் வேலை பார்த்து இருக்காங்க.

மோசடி மன்னர்கள் ”டிரஸ்டுக்கு வெளிநாட்டுல இருந்து கோடிக்கணக்குல பணம் வரப்போகுது. அந்த பணத்தை நம்ம நாட்டுக்கு கொண்டு வரணும்னா சில இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அடுத்தது ஒரே அக்கவுண்ட்ல போடவும் முடியாது. அதனால உங்களுடைய அக்கவுண்ட் நம்பரையும் கொடுங்க. ஒரு இலட்சம் ரூபாய் காசையும் கொடுங்கன்னு” சொல்லித்தான் இந்த வசூல் வேட்டையை நடத்தி இருக்காங்க. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் வேட்டையாடியிருக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஈரோடு மாவட்டத்திலேயும் இதே கதைதான். மோகன்ராஜ் என்பவர், 2015 இலேயே போலீசில் புகார் கொடுத்திட்டாரு. அவர் ஒருவரிடம் மட்டுமே 3 கோடியே 4 இலட்ச ரூபாயை ஆட்டையப் போட்டிருக்கிறார் குடுமியான்மலை ரவிச்சந்திரன். அடுத்தடுத்து 16 வங்கி காசோலைகளை கையில் கொடுத்துவிட்டு, ”ஹவாலா பணம் வந்ததும் சொல்றேன். வங்கியில் போட்டு பணத்தை எடுத்துக்கொள்” என்று சொல்லியே பல வருடங்கள் உருண்டோடிய நிலையில், வங்கியில் போட்ட காசோலைகள் பணமின்றி திரும்பிய நிலையில்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார், மோகன்ராஜ்.

மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை நடத்திய இன்ஸ்பெக்டர் தன்ராஜும், அப்போது ஈரோடு எஸ்.பி.யாக இருந்த சிபி.சக்கரவர்த்தியும் குடுமியான்மலை ரவிச்சந்திரனின் கைதேர்ந்த கலையை கண்டு தலை கிறுகிறுத்து போனார்களாம். அவர்களின் விசாரணையில்தான், அந்த ஈ.சி.ஆர். பங்களா, நடிகைகளுடன் போட்ட கும்மாளம் எல்லாம் வெளிச்சத்துக்கு  வந்திருக்கிறது.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

இந்தமுறை வகையாய் சிக்கின ரவிச்சந்திரனை கைது செய்றாங்க. கூடவே அவரது கூட்டாளிகள் அன்சல்கான், தேவராஜன், அகஸ்டின் லியோ சுந்தர்னு கூட நாலு பேரையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறாங்க. திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழியாக பிணையில் வெளியே வர முயற்சிக்கிறார். கடுப்பான போலீஸ், போடுறா குண்டாஸ்னு குண்டர் தடுப்புச்சட்டத்துல கைது செய்றாங்க.

”வெளியே மக்கள் கொந்தளிச்சு கிடக்கிறாங்க. இந்த நேரத்துல வெளிய போன, தோலை காப்பாற்றிக் கொள்ள முடியாது” னு முடிவெடுத்த, குடுமியான்மலை ரவிச்சந்திரன், வழக்கறிஞரை அழைத்து ஜாமீனுக்கும் முயற்சிக்க வேண்டாம்; குண்டாஸையும் உடைக்க முயற்சிக்க வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

இப்படியாக, சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார். ஜெயில்ல நல்ல பாடம் கத்துக்கிட்டு, மீண்டும் யாரையும் ஏமாத்தாம ஒழுக்கமா இருக்கனும் என்கிற எண்ணத்தோட வெளிய வந்திருப்பாருன்னு நினைச்சீங்கன்னா … உங்களை மாதிரி வெகுளி, ஏமாளி யாரும் இருக்க முடியாதுனு வச்சிக்கோங்க. வெளியில வந்தும் வழக்கம் போல, அவர் கை வரிசையை காட்டத் தவறவில்லை.

தொடர்ந்து பேசுவோம்

–              ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.