அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஜோசியக்காரன் – வசியக்காரனாக மாறிய கதை ! மோசடி மன்னர்கள் – பாகம் 02

திருச்சியில் அடகு நகையை விற்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

குடுமியான்மலை ரவிச்சந்திரன் பாக்குறதுக்குதான் அப்பாவி.  மனுஷன் வாயை திறந்து பேச தொடங்கிட்டா எதிர்ல நிக்கிறவன் வாயை பொளந்துகிட்டு நிக்க வேண்டியதுதான். நாலு வார்த்தை பேசுனா சோலி முடிஞ்சுச்சு. போட்டுருக்கிறதையும் உருவி ரவிச்சந்திரன் கிட்ட கொடுத்துட்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு பேச்சில் மரியாதை நிறைந்திருக்கும். அன்பு கலந்திருக்கும். வசியம் மலிந்திருக்கும். அது தன்னுடைய தாத்தா அப்பா பாரம்பரியத்தில் வந்த ஜோதிட கலையினுடைய தொடர்ச்சியாகக்கூட இருக்கலாம்.

ஆடம்பர வாழ்க்கையின் மீதான மோகம் ரவிச்சந்திரனை ஆட்கொள்கிறது. குறுகிய காலத்திலேயே, எப்படி உயர்வது என்பதை நோக்கி செல்கிறது அவரது சிந்தனை. நல்லா சம்பாதிக்கனும். பணம் காசு கையில் புரளனும். சமூகத்துல நல்ல அந்தஸ்துக்கு உயரனும்னு ஆசைப்படுறாரு. பொதுவா, அந்த கால கட்டத்துல, இப்படி கீழ் மட்டத்திலிருந்து இலட்சாதிபதியாகனும்னா ஒரே வழிதான். லாட்டரி அடிக்கனும். அதுக்காக, அண்ணன், காசு கொடுத்து லாட்டரியெல்லாம் வாங்கிக் கொண்டு அலையவில்லை.

https://www.livyashree.com/

”வெளிநாட்டு லாட்டரியில எனக்கு கோடி கணக்குல பரிசு விழுந்துருக்கு. அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரனும்னா, ஒரே அக்கவுண்ட்ட வச்சி முடியாது. உன்னோட அக்கவுண்ட் டீட்டெய்ல்ஸ் கொடு.”னு மெல்ல நெருங்கிய நண்பர்களிடம் பிட்டைப் போடுகிறார். கூடவே, சில பார்மாலிட்டிஸ் இருக்கு. அதுக்கு ஒரு லட்சம் மட்டும் கொடு. பணம் வந்ததும், பத்து மடங்கா திருப்பித் தந்துவிடுகிறேன்”னு அடுத்த பிட்டையும் போட்டிருக்கிறார்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்டத்தில போலீஸ் இன்பார்மரா இருந்திருக்கிறாரு. அறிவொளி இயக்கத்தில இயங்கி இருக்கிறாரு. ஜோசியரா இருந்திருக்கிறாரு. அந்த பழக்கத்தில அவருக்கு பல வாத்தியார்களை தெரியும். அரசு ஊழியர்களை தெரியும். போலீஸை தெரியும். டாக்டர்களை தெரியும். சில முக்கிய பிரமுகர்களை தெரியும். அவர்களில் இவருக்கு நம்பிக்கையானவர்களிடம் தொடக்க கட்ட வேட்டையை தொடங்குகிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நம்மளையும் இந்த உலகம் நம்புதுனு ரெக்க கட்டி பறக்குது ரவிச்சந்திரனுக்கு. இந்த கை வரிசைய மெல்ல விரிவுபடுத்த முயற்சிக்கிறார். மோசடியை பிசினஸாகவே செய்ய தீர்மானிக்கிறார். அறக்கட்டளைக்கு ஆள் சேர்க்கிறார். மற்றவர்களுக்கு தான் சொன்ன அதே புருடா கதையை தன்னுடைய ஏஜெண்ட்களுக்கும் ஒப்பிக்கிறாரு. ஒரு நகைச்சுவை காட்சி ஒன்றில், அரசர் காலத்தில பயன்படுத்துன பர்னிச்சர்னு ஏலம் விட பத்து பைத்தியங்களை கொண்டு வருவாங்க பார்த்தீங்களா? அதுபோல ஏஜெண்டுகளையும் பயிற்றுவிக்கிறார். ஏஜெண்டுகளுக்கு டூ வீலர் வாங்கி கொடுக்கிறாரு. புதுசா செல்போன் வாங்கிக் கொடுக்கிறாரு. புதுக்கோட்டையை தாண்டி திருச்சி, கரூர்னு எல்லை விரியுது.

குறிப்பாக, பள்ளிக்கூட வாத்தியார்களை வளைச்சுப்போட்ட கதை சுவாரஸ்யமானது. புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்கிற பள்ளிக்கூடங்களுக்கு இவரே ஆர்வப்பட்டு போவாரு. அங்கே நாற்காலிகள் உடைச்சிருக்கா? சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்காம இருக்கா? குடிக்க தண்ணீர் வசதி இல்லையா? இதுபோன்று எது இல்லையோ, அதுக்காகவெல்லாம் அண்ணன் மனம் வருந்துவார். ”என்கிட்ட சொன்னா, சரி செய்து தரமாட்டேனா?” என்று வாத்தியார்களிடம் அன்பாக சண்டையிடுவார். பிறகு, இவரே சொந்த காசில் அந்த வசதிகளையெல்லாம் செய்தும் கொடுப்பார். அப்படியே, வாத்தியார்களை வசியம் பண்ணிடுவாரு.

முக்கியமாக, வட்டார கல்வி அலுவலர்களை நன்றாகவே காக்கா பிடித்து வைத்திருப்பார். அந்த பழக்கத்தை வைத்து ஒவ்வொரு பள்ளிக்கூடமா, புரவலர் என்கிற போர்வையில்  உள்ளே நுழைவார். அப்புறம், வாத்தியார்களையெல்லாம் கூட்டி வச்சி தனியே கூட்டம் போடுவார். அதுல, தன்னோட டிரஸ்ட் பத்தி இல்லாத பொல்லாத கதையெல்லாம் அவிழ்த்து விடுவார். அதை நம்பி ஆசிரியர்களும் யோசிக்காம, இலட்சத்தை கொடுத்திருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்துல, இவருக்கு எதிராக பதிவான புகாரில் இரண்டு ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டே புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியர்களையும் புரோக்கர்களாக மாற்றியிருக்கிறார், குடுமியான்மலை ரவிச்சந்திரன்.

இதில் கொடுமை என்ன தெரியுமா? குடுமியான்மலை ரவிச்சந்திரன் வாத்தியார்களை மொட்டை போட்ட காலகட்டம் 2017. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு, சம்பள உயர்வுனு போராட்ட மனநிலையில், கொந்தளிப்பான சூழலில் ஆசிரியர்கள் இருந்த கால கட்டத்திலேயே, நைசா பேசி தலைக்கு ஒரு இலட்சத்துக்கும் குறையாமல் பணத்தை கறந்திருக்கிறார் என்றால், குடுமியான்மலை ரவிச்சந்திரனின் வசியம் எப்பேர்பட்டது என்பதை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

சாதாரண ஜோசியக்காரனாக இருந்து வசியக்காரனாக மாறியது மட்டுமல்ல; டாக்டராகவும் மாறினாரு குடுமியான்மலை ரவிச்சந்திரன். அந்த கதையை அடுத்த தொடர்ல பேசலாம்.

 —              ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.