அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘டுபாக்கூர்’ – ‘டாக்டர்’ ஆன கதை ! – மோசடி மன்னர்கள் – பாகம் 03

திருச்சியில் அடகு நகையை விற்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஒரே நாளில் ஒபாமா ஆகனும்னு ஆசைப்படுவதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனாலும், இதெல்லாம் ரொம்பவே ஓவர்னு நாமே கதறும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார் குடுமியான்மலை ரவிச்சந்திரன்.

தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது. கொஞ்சம் கெத்தா டாக்டர்னு  போட்டா எப்படி இருக்கும்னு ஆசை வந்திருச்சு. டாக்டர் பட்டம் எங்கே கிடைக்கும்னு தேடி பார்த்தாரு. அமெரிக்க உலக தமிழ் பல்கலை கழகத்தினுடைய தலைவர் செல்வின் குமார்னு ஒருத்தரு இதுபோல பட்டமெல்லாம் விக்கிறாருனு கேள்விபட்டு, நேரடியாக அவரிடமே பேசுகிறார்.

https://www.livyashree.com/

குடுமியான்மலை ரவிச்சந்திரனின் கவனிப்பில் குளிர்ந்துபோன செல்வின்குமாரும், ஒரு நல்ல நாளில் கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்குகிறார். ஜோசியர் ரவிச்சந்திரன், இப்போ டாக்டர் ரவிச்சந்திரன் ஆகிட்டாரு. அவ்வளவுதான் ராக்கெட்ல பறக்க ஆரம்பிச்சிட்டாரு. விசிட்டிங் கார்டு தொடங்கி, விளம்பர பேனர் வரையில் “டாக்டர்” பட்டம் டாலடிக்கிறது.

மோசடி மன்னர்கள் சுற்றுவட்டாரத்தில் எங்கே கோவில் திருவிழா என்றாலும், மஞ்சள் நோட்டீஸோட ரவிச்சந்திரன் வீட்டின் முன்பாக வந்து நின்றுவிடுவார்கள். அவரும் சளைக்காமல், 1001 தொடங்கி 10,001 வரைக்கும் சர்வ சாதாரணமாக சீட்டு எழுதி கொடுத்திடுவாரு. காம்பவுண்ட் கட்டனும், ஆர்ச் கட்டனும், கோயிலை சுத்தி கிரில் கேட் போடனும்னு கேட்டு வந்தாலும் எத்தனை இலட்சம் ஆனாலும் அதையும் செஞ்சி கொடுத்திடுவாரு. அண்ணன் இந்த கோயிலுக்கு திருப்பணி பண்ண கொடுத்த நன்கொடை ரசீதுகளைகூட ஸ்கேன் பண்ணி அதுக்குனு தனியா போர்ட்போலியோ போட்டு பத்திரமா வச்சிருப்பாரு.

கல்லூரி கலை விழாவா அண்ணன்தான் ஸ்பான்சர். கபடி போட்டியா அண்ணன்தான் கப்பு கொடுப்பாரு. ஏரியா ஆட்டோகாரர்கள் எல்லாம் சேர்ந்து ஆயுதபூஜை போடுறாங்களா? அதுக்கும் அண்ணன்தான் டொனேசன். இதுபோல இவர் ஏறாத மேடைகள் கிடையாது. காசு கொடுத்தா போதும். மேடையில ஏத்திருவாங்கன்னா அண்ணன் மறக்காம காசு கொடுத்துருவாரு. கொடுக்கற காசையும் படம் பிடிச்சு வச்சிருவாரு.

மோசடி மன்னர்கள்
மோசடி மன்னர்கள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பத்து ரூபாய்க்கு செஞ்சிட்டு, அதையை படம்பிடிச்சிட்டு பலநூறு செலவு செய்து கட் அவுட் வைக்கிறதுல அண்ணன் ரவிச்சந்திரன் கில்லாடி. குடுமியான்மலை ரவிச்சந்திரனோட அலப்பறைகளை பார்த்துதான், நாடோடிகள் படத்துலயே அந்த காமெடி காட்சியை வைத்திருப்பார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றும்.

இதையெல்லாம் பார்த்து அப்போதைய முன்னணி ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டாங்க. ராஜ் டிவி நடத்தக்கூடிய அகட விகடம் என்கிற நிகழ்ச்சியில் இவரை மேடையேற்றி பெருமைபடுத்தினாங்க. மனுஷன் அதை வச்சே சில காலம் படம் காட்டியிருக்காரு, ஏரியாவில்.

மோசடி மன்னர்கள் அதுமட்டுமல்ல; புதுக்கோட்டையில் தனியா ஒரு கவர்மெண்டே நடத்தியிருக்காருனா பாருங்களேன். இலவச சைக்கிள் கொடுக்கறதா இருக்கட்டும்; கறவை மாடு கொடுக்கறதா இருக்கட்டும்; கல்வி உதவித் தொகை கொடுக்கறதா இருக்கட்டும்; இவர் அந்த புதுக்கோட்டை மாவட்டத்தினுடைய தேர்ந்தெடுக்கப்படாத ஒரு எம்.எல்.ஏ.வைப் போல ஏகப்பட்ட விழாக்களை நடத்தி நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கியிருக்காரு. புதுக்கோட்டைனு இல்லை. திருச்சி, கரூர்னு பக்கத்து மாவட்டத்துக்காரங்களையும் கூட்டி வந்து, திரையுலகத்தினர் கைகளால் தையல் மெஷின், அயன் பாக்ஸ்னு கொடுத்து அசத்தியிருக்காரு. இதையெல்லாத்தையும் காட்டித்தான், மொத்தமா வாரியும் சுருட்டியிருக்காரு, குடுமியான்மலை ரவிச்சந்திரன்.

அண்ணனுக்கு எப்போதுமே, சினிமா மேல தனி மோகம். அதிலேயும் அந்த மூன்றெழுத்து நடிகை மேல … அந்த கதையை அடுத்த  தொடர்ல பேசலாம்.

(தொடரும்)

 

—    ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.