நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங், பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணன் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாமினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.
அப்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், என்னுடைய தொகுதியில் நான் தான் நலத்திட்ட உதவிகள் வழங்குவேன் என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பரித்தார்.
இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் இருவருக்கும் இடையே போடா வாடா என முட்டாப் பயலே என சண்டை போட்டனர். இந்த சம்பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
— ஜெய் ஸ்ரீராம்