தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற எம்.பி. கனிமொழி !
தூத்துக்குடி அருகே சூசை பாண்டியாபுரம் ஊராட்சியில் தொடர் கனமழையால் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேங்கியுள்ள வெள்ள நீரைப் பார்வையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றும் பணியைத் துரிதப்படுத்தினார். மேலும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களுடன் உரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகம் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு, அவற்றை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ ஆணையர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ் இ.ஆ.ப., ,மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., , மேயர் பெ.ஜெகன்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் உடன் சென்றனர்.
— மணிபாரதி.