அங்குசம் சேனலில் இணைய

எம்.பி. கல்யாணசுந்தரம் மா.செ. பதவிபறிப்பு ! பின்னணி என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரத்திடமிருந்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் டெல்டா மாவட்டங்களை கலங்கடித்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டிலேயே, தலைமை செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தவர். பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை தழுவிய நிலையிலும் மாநிலங்களவை எம்.பி.யாக்கி அவரது களப்பணிக்கு அங்கீகாரம் கொடுத்திருந்து கழகம். இந்நிலையில்தான் இந்த அதிரடி அரங்கேறியிருக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவரது மகன் எஸ்.கே. முத்து செல்வத்தை ஒன்றிய செயலாளராகவும், ஊராட்சி குழுத் துணைத்தலைவராகவும் ஆக்கி அழகு பார்த்தவர். அப்பாவும் மகனுமாக சேர்ந்து கொண்டு மாவட்டத்தில் செய்த  அட்ராசிட்டிகளின் எதிர்வினைதான் இந்த அதிரடி என்கிறார்கள்.

போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரைகும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கல்யாண சுந்தரம், அரசு நிலத்தை ஆக்கிரமித்து மேற்படி சங்கம் சார்பில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் தொடர்பான விவகாரத்தில் மாநகராட்சி கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை இடமாற்றம் செய்யவும் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடங்கி, காங்கிசு எம்.பி. சுதாவை மேடையில் வைத்துக் கொண்டே, அவரை அவமதித்தது; பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக மக்கள் கூறிய புகாருக்கு பிள்ளை பெற்றெடுக்க பத்துமாதம் பொறுப்பதை போல பொறுத்துதான் ஆக வேண்டுமென்று பொறுப்பின்றி பேசியது; துண்டு சீட்டு எழுதிக் கொடுத்து இதைத்தான் கேள்வியாக கேட்க வேண்டுமென்று பத்திரிகையாளர்களிடம் கறார் காட்டியது; மகன் முத்து செல்வம் நடத்தும் தண்ணீர் ஆலையில்  நடைபெறும் விதிமீறலும் சமீபத்தில் நடந்த ரெய்டு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதையடுத்தே இந்த மாற்றம் என்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

முத்துசெல்வம்
முத்துசெல்வம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொகுதி வாரியாக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினின் நேரடி விசிட் நிகழ்வின் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து இதுபோன்ற அதிரடிகளை இறக்கிவருகிறது, தி.மு.கழகம்.

இந்த விவகாரம் குறித்து அலசுகிறது, அங்குசம் ஆடுகளம்.

 

முழுமையான வீடியோவை காண 

 

—       அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.