ஆண்டிபட்டி அருகே விவசாயிகள் படுகொலை !!
அக்கா கணவரை சொத்து தகராறு மற்றும் நகை தொழில் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் மைத்துனரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது காவல்துறை விசாரணையில் அம்பலம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வாய்க்கால்பாறை மலையடிவாரத்தில் நண்பர்களான கருப்பையா மற்றும் மணி என்ற இரண்டு விவசாயிகள் கடந்த பிப் 25 ஆம் தேதி விவசாய தோட்டங்களில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
கருப்பையாவின் மைத்துனரான கருப்பசாமி என்பவர் கருப்பையாவுடன் சொத்து தகராறு, நகை, தொழில் தகராறில் இருந்து வந்த முன்பகை காரணமாக கருப்பையா மற்றும் மணி ஆகிய இருவரையும் 4 பேர் கொண்ட கூலிபடையை தயார் செய்து கொலை செய்தது கடமலைகுண்டு காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் கருப்பசாமி மற்றும் கணேசன் நீதிமன்றங்களில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில். மேலும் இதில் தொடர்புடைய அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த மாதவன் சுரேந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்.