காதலை கைவிட மறுத்த 16 வயது மகளை அடித்துக் கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் !

தன் மகளை  ஆத்திரத்தில் கட்டையால் தலையில் தாக்கி படுகொலை செய்து சடலத்தை 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு ...

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காதலை கைவிட மறுத்த மகளை அடித்து ஏரியில் வீசிய பெற்றோர்! ஒசூரை உறையவைத்த சிறுமி படுகொலை!

கிருஷ்ணகிரி, பாகலூர் , அருகே உள்ள பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் ஸ்பூர்த்தி  தன் மகள் காணமால் போனதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார் இந்த நிலையில் மார்ச் 16  இரவு தலையில் காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் சிறுமி ஒருவர் சடலமாக மிதந்துள்ளார் என பாகலூர் போலீசாருக்கு தகவல் வர இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட பாகலூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

Srirangam MLA palaniyandi birthday

விசாரணையில் பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரின் மகள் ஸ்பூர்த்தி (16).  என்பதும்  இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்ததும்  கடந்த 14-ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஸ்பூர்த்தி வீடு திரும்பவில்லை என தெரிய வந்தது.

இந்த நிலையில், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் ஆய்வு செய்தனர்.  அதில் மாணவியின் வீட்டின் அருகே இருந்த கேமரா காட்சிகளைப் பார்த்தபோது, மாணவி மாயமான சமயத்தில், மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமராவை துணி போட்டு மூடியது தெரியவந்தது. இது சம்பந்தமாக மாணவியின் தந்தை பிரகாஷ் , தாய் காமாட்சி  ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

 

அப்போது, இதே பகுதியை சிவா என்ற இளைஞரை  தன் மகள் காதலித்தாகவும்; முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு  அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட சிவா போக்சோவில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அதே  இளைஞரோடு மீண்டும்  தன் மகள் பழகி வந்ததாகவும்; இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என கூறியதை தங்கள் மகள் ஏற்க மறுத்ததையடுத்து தன் மகளை  ஆத்திரத்தில் கட்டையால் தலையில் தாக்கி படுகொலை செய்து சடலத்தை 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு வந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, மாணவியின் அப்பா பிரகாஷ், அம்மா காமாட்சி மற்றும் உடந்தையாக இருந்த பெரியம்மா மீனாட்சி ஆகிய மூன்று பேரையும் பாகலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளைஞரும் சிறுமியும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலைக் கைவிடாத மகளை  பெற்றோரே அடித்து கொலை செய்து, உடலை ஏரியில் வீசிய சம்பவம் ஒசூரை உறையவைத்துள்ளது.

மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.