முசிறி பொதுமக்களுக்கு மரண பீதியை ஏற்படுத்தும் தெருநாய்கள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
முசிறியில் தெரு நாய்களால் தொல்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
முசிறி, நவ. 4 –
திருச்சி மாவட்டம் முசிறியில் 150 க்கும் மேற்ப்பட்ட தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முசிறியில் மொத்தம் 24 வார்டுகளில் 200 க்கும் மேற்ப்பட்ட தெருக்களில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகமானதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலை களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நகரின் முக்கிய பேருந்து நிறுத்தமான கைகாட்டி, பழைய, புதிய பேருந்து நிலையம், மற்றும் வணிக நிறுவனங்கள், பள்ளிகள், இறைச்சி கடைகள், உணவகங்கள் அருகில் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரிகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதைசாரிகள், பெண்கள், குழந்தைகள் செல்லும் போது நாய்கள் துரத்து வதால் செய்வதறியாது தவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று தா.பேட்டை ரோட்டில் சென்ற 10 க்கும் மேற்ப்பட்ட நபர்களை கடித்ததில் அப்பகுதியே பெரும் அச்சத்தில் இருந்தது.
இதேபோல துறையூரில் இருந்து குளித்தலைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது ஒன்றோடு ஒன்று தெரு நாய்கள் அடித்துக் கொண்டு போய் இருசக்கர வாகனத்தில் விழுந்தது அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாகனமும் சேதமடைந்தது.
சாலைகளில் தெரு நாய்கள் ஆங்காங்கே அடித்துக் கொண்டு குறுக்கையும் நெருக்கையும் திரிவதால் வாகன ஓட்டிகள் சடனென நிலைத்தடுமாறி வாகனத்தை நிறுத்தும் பொழுது பின் தொடர்ந்து வருபவர்கள் நிலை தடுமாறி ஒன்றோடு ஒன்றாக இடித்துக் கொண்ட சம்பவங்களும் தொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று தான் வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தரப்பில் நகராட்சி நிர்வாகத்தினர் இடம் புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தென போக்கில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.