அங்குசம் சேனலில் இணைய

திருப்பூரில் 10 வது புதிய முத்தூட் கோல்டு பாயிண்ட் சென்டர் திறப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருப்பூரில் 10 வது கிளையுடன் முத்தூட் கோல்டு பாயிண்டு தமிழ்நாட்டில் தனது அடையாளத்தை விரிவுபடுத்துகிறது

வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான மதிப்பை உறுதி செய்கின்ற இந்தப் புதிய சென்டர் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகத் தங்கள் தங்கத்தை விற்பனை செய்யலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருப்பூர் ஜூன் 26, 2025: 138 ஆண்டுகள் பழமையான வணிக நிறுவனமாகிய முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் (முத்தூட் ப்ளூ எனவும் அழைக்கப்படுகிறது) விலையுயர்ந்த உலோகப் பிரிவான முத்தூட் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட், பிரம்மாண்டமாகத் தனது புதிய கோல்டு பாயிண்ட் சென்டரை திருப்பூரில் திறப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. முத்தூட் கோல்டு பாயிண்ட், 1வது தளம், கதவு எண். 513, NP காம்ப்ளக்ஸ், தனலட்சுமி வங்கி அருகில், புஸ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவினாசி சாலை, திருப்பூர்-641602 என்ற முகவரியில் இந்தப் புதிய முத்தூட் கோல்டு பாயிண்ட் அமைந்துள்ளது.

இது, இந்தியாவில் முத்தூட் எக்ஸிமின் 51 வது கோல்டு பாயிண்ட் சென்டராகவும், தமிழ்நாட்டில் 10 வது கிளையாகவும் திறக்கப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

முத்தூட் கோல்டு பாயிண்ட்தமிழ்நாட்டின் திருப்பூரில் திறக்கப்படும் இந்த கோல்டு பாயிண்ட் சென்டர், உள்ளூர் மக்களின் நிதிசார் வாழ்க்கையை மாற்றுகின்ற ஒரு அலையாக விளங்கும். இந்த நம்பகமான மற்றும் வெளிப்படையான சென்டர், தங்கள் தங்கத்தை விற்பனை செய்து பணத்தைப் பெற்று. நிதிச் சேவைகளை மேலும் எளிதாக அணுகுவதற்கு அவர்களுக்கு உதவும். முத்தூட் எக்ஸிமின் கோல்டு பாயிண்ட் சென்டர்கள் அவற்றின் வெளிப்படைத்தன்மைக்காகவும், வாடிக்கையாளரின் நம்பிக்கைக்கும் மிகவும் பிரபலமானவையாகும்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இந்த சென்டர்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட தங்கப் பொருட்களுக்கான நியாயமான மற்றும் துல்லியமான மதிப்பீடுகளைப் பெற்று, அவற்றை விற்பனை செய்யலாம். இந்த மொத்த செயல்முறையும் வெளிப்படையாக நடத்தப்படும், எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கள் மதிப்பிடப்படுவதை நேரடியாகப் பார்க்கலாம்.

ரூ. 10,000 வரையிலான தங்கத்திற்கு ரொக்கமாகப் பணம் வழங்கப்படும், அதற்கும் மேற்பட்ட மதிப்புடைய தங்கத்திற்கு IMPS, NEFT அல்லது RTGS மூலம் பணம் வழங்கப்படுவதால், தடையில்லாத, நம்பிக்கையான பரிவர்த்தனை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், முத்தூட் எக்ஸிமின் நிர்வாக இயக்குநருமான தாமஸ் முத்தூட் அவர்கள் மேற்கொண்டு தெரிவிக்கையில், “எங்கள் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக நாங்கள் இந்த கோல்டு பாயிண்டு சென்டரைத் திருப்பூரில் தொடங்குகிறோம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் வெளிப்படையான, நியாயமான மற்றும் செயல்திறனுடன் கூடிய சேவையை வழங்க நாங்கள் விரும்புகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கியுள்ள நம்பகத்தன்மைக்காகவும், நம்பிக்கைக்காகவும் வாடிக்கையாளர்கள் எங்களைத் தேர்வு செய்கிறார்கள், இந்த விழுமியங்களை எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலைநிறுத்துவதற்கு நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். இந்தப் புதிய சென்டர், வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை விற்று, தங்கள் சொத்துக்களுக்கு சிறந்த மதிப்பைப் பெறுவதற்காக, பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத செயல்முறையை வழங்கும்.” என்று தெரிவித்தார்.

முத்தூட் கோல்டு பாயிண்ட்முத்தூட் எக்ஸிம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. கேயுர் ஷா அவர்கள் கூறியதாவது, “தமிழ்நாட்டின் திருப்பூரில் எங்கள் 10 வது முத்தூட் கோல்டு பாயிண்ட் கிளையைத் திறப்பதன் மூலம், நம்பகமான மற்றும் வெளிப்படையான, தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கும் சேவைகளை மக்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் அடைந்துள்ளோம். திருப்பூர் மிகுந்த நம்பிக்கையளிக்கின்ற துடிப்பான மாவட்டம், அதன் மக்களுக்கு அவர்களின் தங்கப் பொருட்களை விற்பனை செய்வதற்கான சேவையை எளிதாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் வழங்கும் நம்பகமான தளத்தை வழங்குவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

முத்தூட் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் (MEPL) விலையுயர்ந்த உலோகங்கள் சந்தையில் புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தியாவில் தங்க மறுசுழற்சி சென்டரைத் தொடங்கிய முதல் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாக விளங்கும் MEPL தொடர்ந்து இந்தத் துறையில் தனது முத்திரைகளைப் பதித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் தனது முதல் கோல்டு பாயிண்ட் சென்டரைத் திறந்த இந்த நிறுவனம் மும்பை, பெங்களூரு, சென்னை, எர்ணாகுளம், திருவனந்தபுரம், டெல்லி NCR, கொல்கத்தா, ஹைதராபாத், ஹூப்பளி, நாக்பூர், பராசத், திருநெல்வேலி, குண்டூர், வாரங்கல், தாவங்கேரி, புவனேஸ்வர், கலபுரகி, திருச்சூர், லக்னோ, மொஹாலி, வேலூர், ஃபரிதாபாத், கோழிக்கோடு, திருச்சி, பெலகாவி, செராம்பூர், மதுரா மற்றும் இப்போது செகந்திராபாத் உள்ளிட்ட, முக்கிய நகரங்களுக்குத் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.