என் ஜாதகம் மோசம்.. என்னிடம் சிக்கினால்.. ஒன்னு “உள்ளே”…இல்லன்னா “மேலே”…ஆர்.எஸ்.பாரதி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என் ஜாதகம் மோசம்..

என்னிடம் சிக்கினால்..

Srirangam MLA palaniyandi birthday

ஒன்னு “உள்ளே”…இல்லன்னா

“மேலே”…ஆர்.எஸ்.பாரதி

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தினம்தோறும் சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார்.

ரபேல் வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று அவர் பேசப் போக, அந்த விவகாரம் அரசியலில் படு சூட்டை கிளப்பி விட்டது .

அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை விட்டேனா பார் என்று துரத்தி துரத்தி வருகிறார்.

வாட்ச் வாங்கியதற்கான பில்லை காட்ட வேண்டும் என்று அவர் கூற, ஏப்ரல் மாதம் காட்டுகிறேன் என்று அண்ணாமலை பதில் தெரிவித்தார்.

 

அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி பில் தயாரிக்க டைம் வேணுமோ என்று கிண்டல் அடித்தார்.

 

இப்படி ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ். பாரதி அதிரடி ஒன்றை வீசி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர். எஸ். பாரதி பேசும்போது,

என் ஜாதகம் மிகவும் மோசமான ஜாதகம்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

நான் ஒரு புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்று சிறைக்கு செல்வார்கள்.

இல்லையேல் அரசியலை விட்டு ஓடி விடுவார்கள்.

அதுவும் இல்லை என்றால் “மேலே”சென்று விடுவார்கள்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பாக புகார் தெரிவித்தவனே நான்தான்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அந்த வழக்கில் தான் ஜெயலலிதா உள்ளே சென்றார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்..

அந்த வரிசையில் தற்போது என்னிடம் அண்ணாமலை சிக்கிவிட்டார்.  5 லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்கியதற்கு பில் காட்டுங்க என்றால் இதோ அதோ என்கிறார். பில்ல மட்டும் நீங்க வெளியிடுங்க உங்களுக்கு வேறு ஒரு வில்லங்கம் வைத்திருக்கிறேன் அதை நான் வெளியிடுகிறேன் என்றார்… அண்ணாமலைக்கும் ஆர் .எஸ் . பாரதிக்கும் இடையே ஏற்கனவே கருத்து மோதல் ஒன்று உள்ளது.

அண்ணாமலை வாட்ச் சர்ச்சை
அண்ணாமலை வாட்ச் சர்ச்சை

ஆர். எஸ். பாரதி குறித்து ஏற்கனவே அண்ணாமலை பேசும் போது, அறிவாலயம் வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். அதைக் கேட்ட ஆர். எஸ். பாரதி, அறிவாலயம் ஒரு கோயில் என்று பதில் அளித்தார்.

அப்போ கோவிலில் பிச்சை எடுப்பதற்கு தட்டு அனுப்புகிறேன் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டு பார்சலில் தட்டு அனுப்பும் போராட்டத்தை ஏற்கனவே அண்ணாமலை நடத்தினார்.

இந்த கடுப்பின் வெளிப்பாடுதான்

ஆர். எஸ். பாரதியின் கிருஷ்ணகிரி பேச்சாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– சட்டநாதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.