“உலகம் மாறுது நாமும் மாறணும்” – டைரக்டர் ராஜு முருகன்!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்த ‘ மை லார்ட்’ ( My Lord) படம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்காக பிப்ரவரி 18-ஆம் தேதி படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள்….
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்
“அம்பேத் சாரை நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்…
இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.
தயாரிப்பாளர் அம்பேத்குமார்
“படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள்.
‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்”.

இயக்குநர் ராஜுமுருகன்
“ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோமோ அதே தீவிரத்தோடு புரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி”.

சசிகுமார்
“ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
படத்தின் முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.