அங்குசம் சேனலில் இணைய

அண்ணாமலை மாதிரி வேல்யாத்திரை இல்ல … இது வேற மாதிரி யாத்திரை – நயினார் நாகேந்திரன் நச் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதிப்பிற்குரிய அண்ணாமலை வேல்யாத்திரை நடைபயணம் நடத்தினார்| என்னுடைய யாத்திரை சட்டமன்றத்தை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு யாத்திரையாக சொல்வது தான் என்னுடைய யாத்திரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் பேட்டி…

மதுரை வண்டியூர் அம்மா திடலில் ஜூன் 22 ல் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பூமிபூஜை நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தாளர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நயினார் நாகேந்திரன் பேட்டி...

இடீ…க்கு பயப்பட மாட்டேன் என்று துணைமுதல்வர் உதயநிதி சொன்னால், அவருடைய நண்பர்களை ஏன் லண்டனுக்கு சென்று  ஒடி ஒழிய வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திமுக கூட்டணிக்கு எங்கள்  கூட்டணியை பார்த்து பயம் வந்தது உண்மைதான். மதுரையும் திமுக பொதுக்குழு நடத்துவது அவர்களுடைய கட்சியின் உரிமை. மோடிக்கு பயப்பட மாட்டேன், ED க்கு பயப்பட மாட்டேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார் ஆனால், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இ.டி. ரைடு எங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.  காங்கிரஸ் ஆட்சி நடந்தது அப்போது கூட்டணியில் இருந்தார்கள்  மேலே ED  ரைடு நடக்கும் போது கீழே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது சின்ன வயதில் இருந்திருப்பார் அதனால் ED க்கு இப்ப வரை பயம் இருக்கு இல்லையென்றால், ரித்தீஷ், விக்ரம் ரெஜு எதற்காக பயந்து லண்டன் போக வேண்டும்? இங்கே இருக்க வேண்டியதானே? உதயநிதி நண்பர்களை கூடவே கூட்டிட்டு போக வேண்டிதானே? ED பயம் இல்லைனால்  ஏன் ஓடி ஒழிய வேண்டும் ED ரெய்டுக்கு பயந்து நண்பரை லண்டனுக்கு அனுப்ப வேண்டும் ?

நயினார் நாகேந்திரன் பேட்டி...முருக பக்தர்கள் மாநாடு தேர்தல் எதிரொலிக்கும் வகையில் இருக்குமா என்றால் முழுக்க முழுக்க இந்த மாநாடு பக்தி மாநாடு, ஏற்கனவே அரசாங்கம் சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகபாபு நடத்திய மாநாடு நடத்திருக்கிறார்கள் அப்படி இருக்காது இந்த மாநாடு இது சிறந்த பெதுமக்கள் பயனுள்ள பக்தி மாநாடாக அமையும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்கள் வேல்யாத்திரை நடைபயணம் நடத்தினார். என்னுடைய யாத்திரை சட்டமன்றத்தை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு யாத்திரையாக சொல்வதுதான் என்னுடைய யாத்திரை.

முந்தைய தேர்தலில் நான் பேராசிரியர் சீனிவாசன் உட்பட சிலர் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம். இனி முதல் இடத்திற்கு வந்து சட்டமன்றத்திற்கு போவோம்.

முதல்வர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு ….

முதலமைச்சர் அவர்கள் நிதி  கூட்டத்திற்கு முதலில் போகிற மாதிரியும் அதற்குப் பிறகு போற மாதிரி இல்லன்னு ஒரு கருத்தை சொன்னார் அதற்குப் பிறகு சூழ்நிலை ஏற்ற அடிப்படையில் எதற்காக போனார் என்று நீங்கள் கேட்டால் விளக்கமாக சொல்லுவார்.

பிரதமர் மோடியை தனியாகவும் சந்தித்து பார்த்து பேசியது பற்றி ஊடகங்கள் கேட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரியும்

ED ரெயிடுக்காகதான் முதல்வர் பிரதமரை சந்தித்தார் என்று விமர்சனம் வருகிறது. எங்கள் எண்ணமும் அதுவாக தான் இருக்கிறது என்று பேசினார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.