நாங்கள் குப்பைகள் – கவிதை தொகுப்பு
பயன் படாதுயொன
எங்களை தூக்கி எறிந்த உறவுகள்
பயன்படாத பொருள்களை
அள்ளி
நாங்கள் பயனுள்ள போ்வழியாய்
முகம் சுளிக்காமல்
குப்பை கழிவுகளை
சுத்தம் செய்யும்
தொழிலாளி
எங்கள் வாழ்க்கை
ஏகப்பட்ட வலி
கோனலான முதுகில்
கோணியை மூலதனம்
நிமிர்ந்த நோ்மையான
இதயத்தால்
நடை தளா்ந்த கால்களில்
விடியல்
விடை தேடும்
வறுமை இருட்டு
மனிதா்கள் தராத நம்பிக்கை
பிளஸ்டிக் பொருள்கள்
தருகின்ற வாழ்க்கை
உங்களை சுத்தாமக்கும்
நாங்கள்
எங்கள் மேல்
அசுத்தமான பார்வை ஏன்
சாதி நிறம் பார்க்கும்
மனிதரில்
குப்பையில்
பசியாரும் வயிறுகள்
பணம் படைத்த கண்களுக்கு
நாங்கள்
குப்பைகள்….
— தஞ்சை ஹேமலதா
Comments are closed, but trackbacks and pingbacks are open.