அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசிய அளவிலான விருதை பெற்ற திருச்சி மா காவேரி மருத்துவமனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

சிறந்த மற்றும் நேர்மையான மருத்துவ சேவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முழு அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, ‘2025-ஆம் ஆண்டின் சிறந்த தாய்-சேய் நல பிராண்டு’ என்ற தேசிய அளவிலான விருதை எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் திருச்சி மா காவேரி நிறுவனத்துக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதை திருச்சி காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி டைரக்டர்  ஆர். அன்புச்செழியன் பெற்றுக்கொண்டார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“எங்களது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் இதர பணியாளர்களின் அயராத கூட்டு உழைப்பால் மட்டுமே தேசிய அளவிலான அங்கீகாரம் சாத்தியமாகியிருக்கிறது. மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், பாதுகாப்பான சிகிச்சையை வழங்குவதில் எங்களுக்கிருக்கும் உறுதியையும் இந்த விருது பிரதிபலிக்கிறது.” என்கிறார், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், செயல் இயக்குனர், மற்றும் குழந்தை மருத்துவத் துறை தலைவரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் டி. செங்குட்டுவன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Trichy's Kaveri Hospitalநாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேலான மகப்பேறு மற்றும் பிரசவ சேவை மருத்துவமனைகள், குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனங்கள், மற்றும் குழந்தை வளர்ப்பு சேவை, மனநலம் மற்றும் குடும்ப நல நிறுவனங்கள் ஆகியவற்றின் தரம் மற்றும் செயல்பாடுகளை பரிலீசித்து, நிறைவாக, சேவையில் பாதுகாப்பு, நூதனம், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மா காவேரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

காலத்தால் அழியாத திருச்சியின் அடையாளம் காவேரி ஆறு மட்டுமல்ல; திருச்சி காவிரி குழும மருத்துவமனையும்தான் என்பதை தனது மருத்துவ சேவையின் வழியே உணர்த்தியிருக்கிறார்கள்.

—   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.