திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய குறும்படத் திருவிழா !
தேசிய குறும்படத் திருவிழா திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையும், காட்சி ஊடகத்துறையும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட திருவிழா 22.2.25 அன்று கல்லூரியின் ஜூபிலி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்க விழாவில் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சூரி கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். அவர் பேசும் போது கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது திறன்களை வளர்த்து வாழ்க்கையில் மேம்பட வேண்டும் என்றார். கல்லூரியின் செயலர் அருள் முனைவர். கே. அமல் சே ச கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்வில் விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் நிரஞ்சன் மற்றும் கபில் பங்கேற்பாளர்களிடையே கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். கணிப்பொறி அறிவியல் துறை தலைவர் முனைவர் ஆரோக்கியம் தொடக்க விழாவில் வரவேற்புரை ஆற்றினார். காட்சி ஊடகத்துறை தலைவர் முனைவர் தமிழரசி நன்றியுரை ஆற்றினார்.
தேசிய அளவில் நடைபெற்ற குறும்படத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்தும் கல்லூரி மாணவர்களும் குறும்பட இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்களது குறும்படங்களை திரையிட்டு நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

மொத்தமாக 31 திரைப்படங்கள் போதை ஒழிப்பு, சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுண்ணறிவு போன்ற பல்வேறு தலைப்புகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல் பரிசாக ரூபாய் 20,000 திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் ரகுமான்கான் மற்றும் தனி பிரிவின் இயக்குனர் யுஜேஷ் ஆகியோரின் திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் தந்தை ஈவேரா கல்லூரியின் மாணவர் வினோத், மற்றும் தனிப்பிரிவு இயக்குனர்கள் ஸ்ரீராம் மற்றும் திலீப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரியின் மாணவர் வினோத் செல்வன் மற்றும் தூய வளனார் கல்லூரியின் பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் மத்திய பாரத சேவா சங்கத்தின் தலைவர் சாக் மோயிசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஒவ்வொரு மாணவர்களிடத்திலும் உள்ள திறமையை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தி சரியான தருணத்தில் வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். அறிவு, திறமை, அணுகுமுறை மூன்றையும் கொண்டால் வெற்றி நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் கலந்து கொண்டு பங்கேற்ற குறும்பட இயக்குநர்களையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் திரையிட்ட திரைப்படங்களின் இயக்குனர்கள் அனைவருக்கும் பரிசு கேடயமும் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் தொழில் சார்ந்த படிப்புகளின் ஒருங்கிணைப்பாளர் தலைவர் முனைவர் காணிக்கை ராஜ், ஈ வி ஆர் கல்லூரியின் ஊடகவியல் துறை பேராசிரியர் செந்திலா தேவி, மற்றும் பல் துறை பேராசிரியர்கள், மற்றும் பல்வேறு கல்லூரிகளின் ஊடகவியல் துறையைச் சார்ந்த மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் கணிப்பொறி அறிவியல் துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெக்ஸ் சிரில் வரவேற்றார், மல்டிமீடியா கிளப் ஊக்குநர் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை பேராசிரியர் விமல் ஜெரால்டு நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் ஆரோக்கியம் அவர்களும் காட்சி ஊடக அறிவியல் துறை தலைவர் முனைவர் தமிழரசி அவர்களும், மல்டி மீடியா கிளப் ஊக்குநர் முனைவர் விமல் ஜெரால்டு, கணிப்பொறி அறிவியல் துறை மன்றத் தலைவர் பேரா. சார்லஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.