செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்
செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்க துறையின் செப்பர்டு வணிகவியல் துறை மற்றும் தி ஐ ஃ பவுண்டேஷன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் விராலிமலை ஒன்றியம் மேலப்பச்சக்குடி கிராமத்தில் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் சே ச மற்றும் விரிவாக்க இயக்குனர் அருள் முனைவர் சகாயராஜ் அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்ச்சியை மேலாண்மையின் புலம் புல முதன்மையர் ஜூலியஸ் சீசர் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார் ஊர் தலைவர் முத்துராமன் புனித சிலுவை கல்லூரியின் தமிழ் துறைசிரியர் முனைவர் ஷர்மி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தி ஐ ஃபவுன்டேஷன் கண் மருத்துவமனையின் குழுவினர் கண் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்கள். மேலப்பச்சைக்குடி இடையப்பட்டி அக்கல் நாயக்கன்பட்டி குமரப்பட்டி ஆகிய பல்வேறு கிராமங்களிருந்து 89 பேர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் துறையின் மாணவர் பாலகுமார் வரவேற்றார் முடிவில் ஜெப்ரிசன் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியை நிதிஷ் தொகுத்து வழங்கினார் வணிகவியல் துறையின் சுகாதாரக்குழு மாணவர்கள் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.