அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

100 நிமிடங்கள் ! சிலம்பத்தில் சாதனை படைத்த 300 மாணவர்கள் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

28 .05 .2025 அன்று இராஜபாளையத்தில் உள்ள AKDR கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினார்கள்.

அந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் தனது ஆசான்கள் மற்றும் பெற்றோர்களுடன் கல்லூரிக்கு உற்சாகமாக  வருகை தந்து,  தமிழர்களின் வீர விளையாட்டான  சிலம்பம் விளையாட்டில் ஒரு மாற்று முயற்சியாக அனைத்து மாணவ மாணவிகளும் தனது கண்கள் மற்றும் கால்களை கட்டிக்கொண்டு 100 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி  காட்டி தனது திறமையை வெளி காட்டினார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

உலக சாதனை நிகழ்வு இந்த நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இராஜபாளையம்  நகராட்சி சேர்மன் திருமதி பவித்ரா  ஷியாம் அவர்கள் மாணவ மாணவிகளின் வீரத்தையும், தைரியத்தையும் பாராட்டி சிறப்புரையாற்றினார்கள். மேலும் இன்னும் நிறைய சாதனைகள் புரிய வாழ்த்துரையும் வழங்கினார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உலக சாதனை நிகழ்வு இராஜபாளையம் துணைச் சேர்மன் திரு  கற்பக துரைராஜ் அவர்கள் அனைத்து மாணவ மாணவிகளையும் பாராட்டியும்,வாழ்த்தியும் பேசினார்கள். இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மரியபாக்கியம் அவர்கள் அனைத்து குழந்தைகளையும்  பாராட்டி அந்த முயற்சிக்கு உந்துகோளாக இருந்த அனைத்து ஆசான்மார்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்தி பெருமைப்படுத்தி  உலக சாதனை நிகழ்வை துவங்கி வைத்தார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

உலக சாதனை நிகழ்வு உலக சாதனை நிகழ்வு நடைபெற்ற பிறகு சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் அந்த நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள். இந்த நிகழ்வின் இறுதியில்  உலக சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு பதக்கங்களும் மற்றும் பயிற்றுவித்த ஆசான்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அந்நிகழ்வின் போது சிறப்பு கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் திரு லா. ராஜ்குமார் அவர்கள் சிலம்பம் விளையாட்டின் பெருமை, முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி  மாணவ மாணவிகளுடன்  பகிர்ந்து கொண்டு,உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி உற்சாக படுத்தினார்கள்.

உலக சாதனை நிகழ்வு மேலும் அதைத் தொடர்ந்து AKDR பெண்கள் கல்லூரியின் முதல்வர் திருமதி லட்சுமி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உலக சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்த மாணவ மாணவிகளை பாராட்டி பதக்கங்களையும், ஆசான்களை பாராட்டி நினைவு பரிசுகளையும் வழங்கினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.