புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க தொடக்க விழா
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 16/07/2025 அன்று அன்னை சோஃபி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ. இராமஜெயம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சேவை மனப்பான்மை, நெகிழிப் பயன்பாடு, நாட்டு நலப்பணியில் மாணவியின் பங்கு குறித்து பல பயனுள்ள தகவல்களை வழங்கினார். செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் செஞ்சுருள் சங்கத்தினைப் பற்றி பேசும் பொழுது அது தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணத்தையும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதையும் எய்ட்ஸ் இல்லாத நாடாக மாற்ற வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருள் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருள் சகோதரி சற்குணா முன்னிலையில் இவ்விழாவானது நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், முனைவர் பி.மெர்லின் கோகிலா மற்றும் முனைவர் கு.டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, முனைவர் குழந்தை பிரியா, முனைவர் யசோதா கலந்து கொண்டனர்.
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் பி. மெர்லின் கோகிலா இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.