’நயன்தாரா –பியாண்ட் தி ஃபேரி டேல்’
‘Nayanthaara Beyond The Fairy Tale’ The Documentry From Netfilix
நவம்பர் 16—ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடிகை நயன் தாராவிடமிருந்து செம சூடான அறிக்கை வெளியாகி, நடிகர் தனுஷை ரொம்பவே டேமேஜ் பண்ணியது. 3 விநாடிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக அந்த ஹாட் ஸ்டேட்மெண்டில் நயன் சொல்லியிருந்தாலும், “என் மீது தனிப்பட்ட வெறுப்பு, கடுப்பு, காழ்ப்புணர்ச்சி” என்பதை பல இடங்களில் வலியுறுத்திச் சொல்லியிருந்தார் நயன்.
இந்த டாக்குமெண்ட்ரிக்காக 30—35 கோடி ரூபாய் நயனுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக என்.ஓ.சி. கொடுக்காமல் தனுஷ் அலைக்கழித்ததாக ஸ்ட்ரீமிங் ஆவதற்கு ஒன்றரை நாளுக்கு முன்பு அந்த அறிக்கை வெளியான போதே, டாக்குமெண்ட்ரியின் வெறித்தனமான புரமோஷனுக்காக நெட்ஃபிலிக்ஸ் போட்ட மெகா ப்ளானை நயன் எக்ஸ்கியூட் பண்ணியுள்ளார் என்ற பேச்சு கோலிவுட் முழுவதும் கும்மியடித்தது.
அதை கன்ஃபார்ம் பண்ணும் விதமாகத்தான் நயன் பிறந்த நாளான நவம்பர் 18—ஆம் தேதி மதியம் 1.30—க்கு மேற்படி டாக்குமெண்ட்ரியை ஸ்ட்ரீமிங் செய்தது நெட்ஃபிலிக்ஸ்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாமும் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தோம். ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஓடுகிறது டாக்குமெண்ட்ரி. நயன் தாராவை மலையாள சினிமாவில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சத்தியன் அந்திக்காடு, அதன் பின் டைரக்டர் ஃபாசில், தமிழ்ப்பட இயக்குனர்கள் விஷ்ணுவர்த்தன், அட்லீ, நம்ம ஊரு விஜய் சேதுபதி, ராதிகா சரத்குமார், புஷ்பா கந்தசாமி ( இயக்குனர் கே.பாலசந்தரின் மகள் மற்றும் நயன் தாரா தமிழில் அறிமுகமான ‘ஐயா’ படத்தைத் தயாரித்த கவிதாலயாவின் தலைமை நிர்வாகி ) தெலுங்கு ஹீரோக்கள் நாகார்ஜுனா, ராணாடகுபதி, இவர்களெல்லாம் நயன் குறித்து பல ‘அரிய’ தகவல்களை பெருமையுடன் பகிர்ந்துள்ளனர்.
அவ்வப்போது நயனின் லவ்வர் டைரக்டர் விக்னேஷ் சிவன் குறித்தும் பேசுகின்றனர். நயனின் அம்மாவும் அப்பாவும் கூட விக்னேஷ் சிவன் பெருமை பேசுகின்றனர்.
விக்னேஷ் சிவனின் காதலில் எப்போது, எப்படி விழுந்தேன், கல்யாணம் வரைக்கும் வந்தது எப்படி? இப்ப வரை எப்படி லவ்வுடன் லைஃப்ஃபைக் கொண்டு போகிறோம் என்பதை நயனும் சொன்னார், சிவனும் சொன்னார். கடைசி பத்து நிமிடங்கள் நயன் –சிவன் கல்யாணக் காட்சியும் மாட்சியும் வருகிறது. அதைவிட மிக முக்கியமான சேதி என்னன்னா… 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் டாக்குமெண்ட்ரியில் நான்கு நிமிடங்கள் தான் தமிழில் பேசுகிறார்கள். அப்புறம் எல்லாமே ஆங்கிலம் தான். ஒருவேளை நயன் தாரா உலகத் தலைவி ஆகிட்டாரோ என்னவோ?
எல்லாம் சரி தான்… சரியான வியாபாரி தான் நயன். ஆனால் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரியின் கருத்துக்களை வாங்கிப் போடுவோம்னு வியாபாரி நயன் தாராவுக்குத் தெரியாமப் போச்சு.
எல்லாமே பண வெறின்னு ஆனப்பிறகு ஹரியாவது.. அடுப்புகரியாவது..
ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு நயன்தாரா அப்படி என்ன சாதித்துவிட்டார்? அதான் நமக்கும் தெரியல.
வர்ரட்டா….
–மதுரை மாறன்.