பூஜைக்கு 1 கோடி! படத்துக்கு 100 கோடி! மெகா பட்ஜெட்டில் ‘மூக்குத்தி அம்மன் -2’
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,& ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைத் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில், ‘மாஜி லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மார்ச் 06- ஆம் தேதி காலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினரும் கலந்துகொண்டனர். முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

சூப்பர் ஹிட்டுக்கு கன்ஃபார்ம் க்யாரண்டியரான ‘கமர்ஷியல் கிங்’ சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸாண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை: ஹிப் ஹாப் தமிழா, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர்.