தீபாவளிக்கு ரிலீசாகிறது ‘எல்.ஐ.கே.’
நடிப்பில் செம பிஸியாகிவிட்ட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் ‘எல்.ஐ.கே’ படம் வரும் அக்டோடபர் 17—ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீசாகிறது. ’ரெளடி பிக்சர்ஸ்’ பேனரில் தனது கணவர் விக்னேஷ் சிவன் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தை நயன் தாரா தயாரிக்க, ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித்குமார் வழங்குகிறார். படத்தின் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி, மற்ற கேரக்டர்களில் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, கெளரி கிஷன், சீமான், உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு : ரவிவர்மன், இசை : அனிருத், எடிட்டிங் : பிரதீப் ராகவ், ஆர்ட் & தயாரிப்பு வடிவமைப்பு : டி.முத்துராஜ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
— மதுரை மாறன்