நியோமேக்ஸ் : மதுரைக்கு போக செலவில்லை ! வீட்டில் இருந்தபடியே அஞ்சலில் புகார் அளிக்கலாம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி திருப்பமாக, மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அளித்திருந்த தீர்ப்பின் அடிப்படையில் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் புகார் அளிப்பதற்காக வாய்ப்பை வழங்கும் வகையில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதுவரையில் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்றிருந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே அஞ்சல் வழியாகவும் எளிதாக புகார் அளிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

தீபாவளி வாழ்த்துகள்

நியோமேக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்களான சார்லஸ், இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நியோமேக்ஸின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ரொபோகோ பிராப்பர்டீஸ் இன்வெஸ்டார்ஸ் வெல்ஃபேர் சொசைட்டியின் சார்பில், அதன் தலைவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்த எஸ்.நடராஜன் (CRL OP(MD) No.13901/2024) மற்றும் டி.ஜெயின்குமார்(CRL.OP(MD).15498/2024) ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மற்றும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் செந்தில்வேல் என்பவர் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட (Crl.OP(MD).17183/2024) மனு ஆகிய மூன்று வழக்குகளும்  மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது.

கடந்த அக்-19 அன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில்தான் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அதிரடி தீர்ப்பை வெளியிட்டிருந்தார் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி. அப்போது அவர் அளித்திருந்த தீர்ப்பில் சில மாறுதல்களை கோரி, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில்  ”for being mentioned” கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. போலீசார் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அனுமதித்தும் அதற்கேற்ப முந்தைய தீர்ப்பில் மாற்றங்களை செய்தும் மறு உத்தரவை பிறப்பித்திருந்தார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நவம்பர்-04 ஆம் தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் 5-ஆம் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேபோல, ஆங்கில தினசரியான தி இந்து நாளிதழிலும் விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

அந்த அறிவிப்பில், நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேற்படி நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் பெயர், மொபைல் எண், ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்களோடு, முதலீடு செய்த பாண்டுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு பாண்டுக்கும் தனித்தனியாக முதலீடு பற்றிய விவரம்.

நியோமேக்ஸ் வழக்கு
நியோமேக்ஸ் வழக்கு

அதாவது பாண்டுகளில் உள்ளபடி நிறுவனத்தின் பெயர், கஸ்டமர் ஐ.டி., முதலீட்டு தொகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும், பணமாக முதலீடு செய்யப்பட்டதா? வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்டதா? என்ற விவரம். வங்கி மூலம் செலுத்தப்பட்டது என்றால், எந்த வங்கிக் கணக்கிலிருந்து எந்த வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற விவரம். நிறைவாக, ஏஜெண்டின் பெயர், முகவரி, கைப்பேசி எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து புகார் அளிக்கும் வகையில் மாதிரி படிவத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் பத்திரிகை விளம்பரமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண் : 03/2023,

ச.பி. 406, 420 r/w 34 IPC & Sec. 5 of TNPID (F&E) Act 1997 @ 406, 420, 120(b) IPC & Sec. 5 of

TNPID (F&E) Act 1997 & Sec. 3, 4, 5, 21 (1) (2) (3), 22, 23, 25 OF BUDS Act 2019

மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் “Neomax Properties Private Limited” நிதி நிறுவனம் மற்றும் அதன்

1)Garlando Properties Pvt Ltd.

2) Transco Properties Pvt Ltd.

3) Trides Properties Pvt Ltd.

4) Glowmax Properties Pvt Ltd.,

5) Neomax Realtors Properties Private Limited

6) Neomax Developers Private Limited,

7) Centrio Properties Private Limited

8) Recario Properties Private Limited,

9) Adventas Global Properties Private Limited,

10) Explora Retail Private Limited,

11) Safro Properties Private Limited,

12) Adlandino Developers Private Limited,

13)Lomy Properties Private Limited,

14) Robaco Properties Private Limited,

15) Libertas Properties Private Limited,

16) Astonis Properties Private Limited,

17) Milliona Developers Private Limited,

18) Livpride Properties Private Limited,

19) STCS Logistics Private Limited,

20) Green Royale Retails Holdings Pvt. Ltd.

21) Silvercorp Properties Pvt. Ltd.,

22) Properties Pvt Ltd

23) Livsmart Properties Pvt., Ltd.,

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

24) Ventura Developers India Pvt. Ltd,

25) Auro Chits Pvt. Ltd.,

26) Green Wealth Agro India Ltd

27) Amaze Properties India Ltd

28) Neomax Promoters Pvt Ltd

29) CaptivaMagnificio Properties Pvt Ltd,

30) Promax Promoters Pvt Ltd

31) South Field Properties Pvt Ltd

32) Safro Realty Pvt Ltd

33) Astronio Properties Pvt Ltd

34) Exubera Retail Pvt Ltd,

35) Leoneo Properties Pvt.Ltd,

36) Western Valley Properties Pvt Ltd,

37)Tetra Global Properties Pvt. Ltd.,

38) Glenmax Properties Pvt Ltd,

39) Neosco Developers Pvt Ltd,

40) Sanspolo Properties Pvt Ltd,

41) Zeneca Developers Pvt Ltd,

42) Skylaa Retail Mall Pvt Ltd,

முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண்.03/2023, U/s 406, 420 & 34IPC & Sec 5 of TNPID (F&E) Act 1997 @ 406, 420, 120(b) IPC & Sec. 5 of TNPID (F&E) Act 1997 & Sec. 3, 4, 5, 21 (1) (2) (3), 22, 23, 25 of BUDS Act 2019 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் அவர்கள் உத்தரவின்படி இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புலன்விசாரணை அதிகாரியிடம் தக்க ஆவணங்களுடன் Neomax Properties Pvt Ltd மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களின் மீது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார் படிவத்துடன் (Format Petition) தபால் மூலமாகவோ அல்லதுநேரிலோ 15.11.2024ம் தேதி வரையில் கீழ் கண்ட முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே,பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், க.எண் 4/425A, |சங்கரபாண்டியன் நகர், பார்க் டவுன் தபால்தந்தி நகர் விரிவாக்கம் மதுரை-17 என்ற முகவரியில் அனைத்து வேலை| நாட்களிலும் நேரில் காலை 10.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை ஆஜராகி புகார் படிவம் (Format Petition) மற்றும் உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளிக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காவல் துணைகண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை, அயல்பணி: மதுரை.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பின்படி, நவம்பர் – 05 தொடங்கி, நவம்பர்- 15 மாலை  5.00 மணி வரையில் புகார் அளிக்க அவகாசம் வழங்கியிருக்கிறார்கள். தபால் மூலமாகவோ நேரிலோ புகார் அளிக்கலாம்.

தபால் மூலமாக புகார் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,

க.எண் 4/425A, |சங்கரபாண்டியன் நகர்,

பார்க் டவுன் தபால்தந்தி நகர் விரிவாக்கம் மதுரை-17.

மேற்கண்ட முகவரியில் இயங்கிவரும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நேரிலும் புகார் அளிக்கலாம் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

புகார் கொடுக்கலாமா? வேண்டாமா?

நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி, இதுவரை புகாருக்கு செல்லாமல் ஏமாளித்தனமாக காத்துக்கிடக்கும் முதலீட்டாளர்கள் ஒரு பிரிவாக இருக்கிறார்கள்.

”நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இதுநாள்வரையில் காத்திருந்தது போதும்; வெறும் வாய்ப்பேச்சிலேயே ஏய்த்துவிட்டார்கள். இனியும் காத்திருப்பதில் பலனில்லை. தைரியமாக புகாருக்கு சென்றுவிடலாம்.” என்பதாக ஒரு பிரிவு முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள்.

பிறர் உதவியின்றி, வெளியில் செல்லவே முடியாத நிலையில் வயதில் மூத்த பல முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.

நியோமேக்ஸில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துவிட்டோம் என்று வெளியில் சொல்லவே கூச்சப்படும், சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் மதிக்கத்தக்க இடத்தில் இருந்துவரும் முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள்.

நியோமேக்ஸில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்திருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தால், வருமான வரித்துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாவோம். அது புலிவாலை பிடித்த கதையாகிவிடும் என்று தயங்கி, ஒதுங்கி நிற்கும் முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள்.

”புகாரை எங்கு கொடுப்பது? எப்படி கொடுப்பது? எந்த வடிவத்தில் கொடுப்பது” என்ற விவரம்கூட தெரியாத முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள்.

”புகார் கொடுப்பதற்கே மதுரைக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் ஒரே நாளில் வேலை முடியாது. வயது தளர்ந்த நிலையில் அவ்வளவுதூரம் தனியாக எப்படி சென்று திரும்ப முடியும்.” என்பது போன்ற பல்வேறு விதமான வகைப்பாடுகளில் முதலீட்டாளர்கள் பல விதங்களில் பிரிந்து கிடக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறுவிதமான ஊசலாட்டமான மனநிலையுடன் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவை வழங்கும் வகையில், தைரியமாக புகார் அளிப்பதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் அறிவிப்பு.

மிக முக்கியமாக, தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் எந்த மூலையில் இருந்தாலும், இல்லை, கடல்கடந்து வெளிநாடுகளில் இருந்தாலும் அங்கிருந்தபடியே, தபால் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு, முதலீட்டாளர்களுக்கான சாதகமான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 

— அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.