NEOMAX : குழப்பத்தை ஏற்படுத்திய பட்டியல் – அடுத்தது என்ன ?
நியோமேக்ஸ் விவகாரத்தில் eow போலீசார் வெளியிட்ட நிலையில், அந்த பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கருதும் முதலீட்டாளர்கள் மதுரை நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்தாலோசிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக் குழுவின் சார்பில் சிவகாசி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நாளை (09/12/2024) இப்பொழுது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் (கேட் பாஸ் அலுவலகம் அருகில்) ஆலோசனை செய்து அதன் பின் குழுவின் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி இறுதி செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தயவுசெய்து அதிகம் முதலீடு செய்தவர்கள் நாளைய கூட்டத்தில் தவறாது கலந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சட்ட ரீதியான பக்க பலம் இல்லாமல் பெரிய தொகை முதலீடு செய்தவர்கள், அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, அவ்வளவு எளிதாக மற்றவர்கள் போல் நாமும் புகார் கொடுத்துள்ளோம் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் பொழுது, நமக்கும் அதே மாதிரியான தீர்வு கிடைத்து விடும் என்று கருதி மெத்தனமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் அதன் பின் வருத்தப்படுவதில் பயன் இருக்காது.
வழக்கு தாக்கல் செய்வதற்கு எதிர்பாராத விதமாக பல்வேறு காரணங்களுக்காக அதிக நாட்கள் தாமதம் ஆகிவிட்டது. இனி மேல் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாரம் போல் கருதி வழக்கறிஞர்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அன்பான முறையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் தான் வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும். மனுவில் கையொப்பம் இடுவதற்கு கால தாமதம் செய்யாமல் மனுதாரர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் உயர்நீதி மன்ற வளாகத்திற்கு வந்து மனுவின் உறுதி மொழியில் கையொப்பம் இட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வக்காலத்து படிவத்தில் கையொப்பம் இடுவதற்கு கால தாமதம் செய்ய வேண்டாம். இப்பொழுது உள்ள சூழ்நிலையை விவரித்து, ஒரு சிறப்பு கவண ஈர்ப்பு மனு மூலமாக, நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது வரை நடைபெற்ற அனைத்தும் திட்டமிட்டு வழக்கை இழுத்தடித்து கால தாமதப்படுத்துவதற்காகவும் மற்றும் ஒரு தரப்பினரை திருப்தி படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட நாடகம் என பலர் கருதுகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்தால் என்பதற்கிணங்க நடைபெறும் நிகழ்வுகள் இருக்கின்றன என்பது பலரின் கருத்து. பலமான மறைமுக அதிகார வர்க்கத்தின் பின்னனி இல்லாமல் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை பலரும் ஒப்புக் கொள்வதை உணர முடிகிறது. இதை இப்படியே விட்டு விட்டால் நமக்கு நிச்சயமாக நல்ல தீர்ப்பு விரைவில் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இனிமேல் தீவிரமாக அயராது உழைத்தால் தான் நமது வெற்றி இலக்கை நோக்கி நகர இயலும் என பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு சற்று அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இனி வழக்கு தாக்கல் செய்வதில் கால தாமதமாவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அனைத்து மனுதாரர்களும் அடுத்த கட்ட நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மீதமுள்ள அனைத்து வழக்குகளும் இந்த வாரத்தில் கட்டாயமாக தாக்கல் செய்தாக வேண்டும். புலனாய்வு அமைப்பை மாற்றக் கோரும் மனுவில் இப்பொழுது நடைபெற்ற விசயங்களையும் சேர்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
EOW விற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் நல்ல தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற ஒத்த கருத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் செயல்படுகின்றனர். வழக்கு செல்லும் பாதை மற்றும் விதம் சரியானதாக இல்லை என்பதை புரிந்து கொண்டார்கள். EOW ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழ மனுக்களுக்கு சமர்பிக்க இருக்கும் பதில் மனுவில் இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள இயலும். முன்பு புகார் கொடுத்தவர்களில் சிலர் மட்டுமே சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களுக்கு இழந்த பணத்தை நல்ல முறையில் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது போல் மற்றும் வழக்குகளுக்கு செலவு செய்ய விரும்பாதவர்கள் போல் செயல்படுகின்றனர்.
யாராவது எதையாவதை செய்து அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நல்ல தீர்வு கிடைப்பதற்கு வழி செய்வார்கள் என்ற எண்ணத்தில் பலர் இருப்பதாக தெரிகிறது. முதலீட்டாளர்களில் பல பிரிவினர் எதிரிகளுக்கு பல விதங்களில் ஆதரவாக நீதிமன்றத்தில் கூட செயல் பட்டார்கள். எதிரிகளிடமிருந்து கிடைக்கும் சில்லரைக்காக பல்வேறு விதங்களில் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக பலர் செயல்பட்டார்கள்.
புகார் கொடுக்காதவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இப்பொழுதும் நிறுவனத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இல்லை என்றால் புகார் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரங்களை கடந்து சென்றிருக்கும். பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும். தீர்வை நோக்கி பயணம் தடை இல்லாமல் சென்று கொண்டிருக்கும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு தரப்பு புகார் கொடுத்தவர்களை வழக்கு தொடுக்க வேண்டாம் என்று வழக்கு தொடுப்பவர்களை மிரட்டியும், திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. தனிநபர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சிலரின் இன்றைய நிலைமையை புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள் என்ன நடக்கின்றது என்று புரியாதவர்கள் பலர். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எதையும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் பலர். அறியாமையில் பலர்.
இப்படி பல விதங்களில் முதலீட்டாளர்கள் இருப்பதால் எதிரிகளுக்கு மற்றும் புலனாய்வு துறைக்கு சாதகமாக விசயங்கள் அமைந்து விடுகிறது. மிக சிலர் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை நம்பி இருப்பவர்கள் பல ஆயிரம் பேர். அனைவரின் நலனுக்காகவும் பொது நலன் கருதி சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த குழவில் இதுவரை இணையாதவர்கள் இணைந்து கொள்ளலாம்.
சட்ட நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஏதாவதொரு வழக்கில் மனுதாரர்களாக இருப்பது நல்லது என்பதை காலம் கடந்து புரிந்து கொள்வார்கள். எப்பொழுது எப்படிப்பட்ட பிரச்சினைகள் எந்த ரூபத்தில் வரும் என கூற இயலாது. அவர் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மனுதாரர் என்ற போர்வையில் அவ்வப்பொழுது அதை நீதி மன்றத்திற்கு தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். முதலீடு தொகை மற்றும் தீர்வு தொகையை நிர்ணயிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க இயலும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைந்த சட்ட போராட்டக் குழு பாதிக்கப்பட்டவர்களை அறிவுறுத்தி உள்ளது.” என்பதாக தெரிவித்துள்ளார்.
— அங்குசம் புலனாய்வு குழு.
ஆக கலைமகள் சபா போன்று நாசம் செய்ய முடிவு செய்து போட்ட முதல் அசல் கூட கிடைக்காமல் செய்வார்கள்…