நியோமேக்ஸ் : திருச்சியில் மட்டும் ஒரு இலட்சம் முதலீட்டாளர்களா ? முழுமையான ரிப்போர்ட் !

6

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் : திருச்சியில் மட்டும் ஒரு இலட்சம் முதலீட்டாளர்களா ? நியோமேக்ஸ் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் இதுவரை புகார் கொடுத்தவர்களின் எண்ணிக்கை வெறும் 8000-க்கும் சற்று அதிகம்தான். நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் தரப்பில் சமர்ப்பித்திருக்கும் அபிடவிட்டில் தெரிவித்திருப்பதோ, 42,000 சொச்சம்.

உண்மையில், தமிழகம் முழுவதும் எப்படியும் குறைந்தது மூன்று இலட்சம் பேர் வரையில் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலை சிவகாசி ராமமூர்த்தி தனது நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதுவும் நியோமேக்ஸ் நிர்வாக இயக்குநர்கள் நடத்திய ஜூம் மீட்டிங்கில் அவர்களே ஒப்புக்கொண்ட விசயம் என்பதையும் அதில் பதிவு செய்திருந்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதனையடுத்து, திருச்சியை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சிலரிடமிருந்து பிரத்யேகமாக அங்குசம் சார்பில் பேசியதிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 10 ரீஜினல் ஹெட்டின் (regionall head) கீழ் வசூல் வேட்டை நடத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

அந்தந்த மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ரீஜினல் ஹெட் (ஆர்.எச்.) என்கிறார்கள். ஒவ்வொரு ரீஜினல் ஹெட்க்கும் கீழே கட்டாயம் ஒரு ஏரியா ஹெட் இருக்கிறார்கள். சில ரீஜினல் ஹெட்டுக்கும் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏரியா ஹெட் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

NeoMax_ad
NeoMax_ad

ஒவ்வொரு ஏரியா ஹெட்டுக்கும் கீழே குறைந்த பட்சம் 5 முதல் 7 வரையில் சென்டர் ஹெட் இருக்கிறார்கள். ஒவ்வொரு சென்டர் ஹெட்டுக்கும் கீழே தலா 5 டீம் ஹெட் இருக்கிறார்கள். தலா ஒவ்வொரு டீம் ஹெட்டுக்கும் கீழே பத்து செக்டார் ஹெட் இருக்கிறார்கள். ஒவ்வொரு செக்டார் ஹெட்டுக்கும் கீழே குறைந்தபட்சம் தலா பத்து கஸ்டமர் பார்ட்னர்கள் இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் 4 கஸ்டமர்களையாவது அறிமுகப்படுத்தினால் மட்டுமே கஸ்டமர் பார்ட்னர் ஆக முடியும் என்பதால், ஒவ்வொரு கஸ்டமர் பார்ட்னருக்கும் கீழே குறைந்தது 5 இன்வெஸ்டார்கள் இருப்பார்கள். இந்த கணக்கின்படி பார்த்தால்கூட, எல்லாவற்றிலும் ஆக குறைந்தபட்சம் என்பதாக கணக்கிட்டால்கூட, ஒவ்வொரு ரீஜினல் ஹெட்டுக்கும் கீழே ஆர்.எச் – 01 நபர் ; ஏ.எச் – 1 நபர்; சி.எச் – 5 நபர்கள்; டீம் ஹெட் – 25 நபர்கள்; செக்டார் ஹெட் – 250 நபர்கள்; கஸ்டமர் பார்ட்னர்கள் 2500 நபர்கள் + முதலீட்டாளர்கள் 12,500 நபர்கள் என குறைந்தபட்சம் 15,000 முதல் 16,000 பேர் வரையில் ஒரு ரீஜினல் ஹெட்டுக்கு கீழ் மட்டுமே இருக்கிறார்கள்.

neomax - Md
neomax – MD

இதனையை கீழிருந்து மேலாக பார்த்தோமேயானால், குறைந்தபட்சம் 4 பேரையாவது கம்பெனியில் சேர்த்துவிட்டால் தான் ஒருவர் கஸ்டமர் பார்ட்னர் ஆக முடியும். தனக்கு கீழே குறைந்தபட்சம் 10 கஸ்டமர் பார்ட்னர்களை வைத்திருந்தால் மட்டுமே ஒருவர் செக்டார் ஹெட் ஆக முடியும். தனக்கு கீழே குறைந்தபட்சம் 5 செக்டார் ஹெட்களை கொண்டிருந்தால் மட்டுமே ஒருவர் டீம் ஹெட் ஆக முடியும்.

தனக்கு கீழே குறைந்தபட்சம் 1 டீம் ஹெட் இருந்தால் மட்டுமே ஒரு செக்டார் ஹெட் ஆக முடியும். தனக்கு கீழே 5 செக்டார் ஹெட் இருந்தால் மட்டுமே ஒருவர் ஏரியா ஹெட் ஆக முடியும். தனக்கு கீழே குறைந்தபட்சம் ஒரு ஏரியா ஹெட் இருந்தால் மட்டுமே ஒருவர் ரீஜினல் ஹெட் ஆக முடியும். இதுதான் நியோமேக்ஸ் தமிழகம் முழுவதும் கட்டமைத்திருக்கும் படிநிலை. ஏறத்தாழ எம்.எல்.எம். பாணியிலான கட்டமைப்பு இது.

ஆப்பிள் மில்லட் - வீரசக்தி
ஆப்பிள் மில்லட் – வீரசக்தி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதன்படி பார்த்தால், ஒரு ரீஜினல் ஹெட்டுக்கு கீழே குறைந்தபட்சம் 15 முதல் 16 ஆயிரம் பேர் வரையில் இடம்பெற்றிருப்பார்கள். குறைந்தபட்ச கணக்கீட்டின்படி பார்த்தால்கூட, எப்படியும் ஒரு இலட்சத்திற்கும் குறையாமல் முதலீட்டாளர்கள் இருப்பார்கள். ஆனால், திருச்சி மாவட்டத்திலிருந்து இதுவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தவர்களின் எண்ணிக்கையோ, வெறும் ஆயிரத்திற்குள்தான் இருக்கும் என்கிறார்கள்.

Neomax Team
Neomax Team

திருச்சியில் நிறுவனர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் வீரசக்தி இருந்து வந்திருக்கிறார். அவருக்கு அடுத்து நாகரத்தினம் – இளஞ்சியம் தம்பதியினர் தான் தலைமை மார்க்கெட்டிங் இயக்குநர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். நாகரத்தினம் என்பவரின் அண்ணன் மகனான பிரகாஷ் என்பவர் தான் ஜோனல் ஹெட்டாக இருந்திருக்கிறார். இவருக்கும் கீழாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பரமேஷ்வரன்; வாசன்நகரை சேர்ந்த பிரகாஷ்; மஹாலக்சுமிநகரை சேர்ந்த பொன்னுசாமி; கடலூரைச் சேர்ந்த பொறையார் செந்தில்; கருமண்டபத்தை சேர்ந்த சந்திரசேகர்; வயலூரைச் சேர்ந்த நாகேஸ்வரன்; மொராய்சிட்டி ராம்; பெரம்பலூரைச் சேர்ந்த சுரேஷ்; கோவையைச் சேர்ந்த சுப்ரமணி , குமரேசன் ஆகிய 10 நபர்கள் ரீஜினல் ஹெட்டாக செயல்பட்டிருக்கிறார்கள்.

நமது விசாரணையில் மட்டுமே, பத்து ரீஜினல் ஹெட் களை அடையாளம் கண்டறிய முடிந்திருக்கிறது. இவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் பெருமளவு வசூல் வேட்டை நடத்திக்கொடுத்த பணக்கார ஏஜெண்டுகளாக, பர்மா பஜார் பாபு, மெக்கானிக் முருகன், சுதாகர், பி.என்.பி.பாலா ஆகியோர் இருந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

Trichy-BHEL
Trichy-BHEL

திருச்சியை பொறுத்தமட்டில், பொதுத்துறை நிறுவனங்களான பெல், துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியவற்றை குறிவைத்து பெரும் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள். ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரையில் பலரும் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தையும் அப்படியே முதலீடாக போட்டிருக்கிறார்கள்.

எம்.எல்.எம். பாணியில் வசூலித்துக் கொடுக்கும் பணத்துக்கு கமிஷன் கொடுத்தததால் பலரும், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று அவர்களையும் வளைத்துப் போட்டிருக்கின்றனர். அதுபோலேவே, எல்.ஐ.சி.யிலும் பெரும் வேட்டை நடத்தப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

குறைந்தபட்சம் 4 பேரை சேர்த்துவிட்டால் கமிஷனுக்கு கமிஷனும் கிடைக்கும். கஸ்டமர் பார்ட்னர் என்ற தகுதியும் கிடைக்கும். நாம் சேர்த்துவிட்ட, இந்த நாலு பேரும் ஆளுக்கு ஒருத்தரை உள்ளே சேர்த்துவிட்டாலும், அதற்கும் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று எம்.எல்.எம். பாணியிலான கமிஷனுக்கு ஆசைப்பட்டு, பெரும்பாலோனோர் தன்னோடு முதலீட்டை நிறுத்திக் கொள்ளாமல் சொந்த பந்தம் என நாலு பேரை சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

நியோமேக்ஸ் கட்டமைத்திருக்கும் படிநிலையில், டீம் ஹெட் வரையிலும்கூட மொத்தமாக கூட்டினால் வெறும் 30-க்குள்தான் வருவார்கள். ஆனால், அதற்கு கீழான நிலையில் சுளையாக 15,000 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். முதலீடு செய்த எல்லோரையுமே கஸ்டமர் பார்ட்னர் என்ற வரையறையின் கீழ் நிறுவனம் கொண்டு வந்துவிட்டதால், நீ புகார் கொடுத்தால் உன்னையே கைது செய்துவிடுவார்கள் என்று அதை சொல்லியே இப்போது வரையிலும் கூட பூச்சாண்டி காட்டி வருகிறார்களாம். இன்னும் சொல்லப்போனால், புகார் கொடுத்தவர்களே கூட, முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர் பார்ட்னர் அளவில் இருப்பவர்கள்தான் என்கிறார்கள்.

இதனையெல்லாம் சாதகமாக்கிக் கொண்டுதான், பெரும்பாலானோரை புகார் கொடுக்கவே விடாமல் தடுத்து வருகிறார்கள் என்கிறார்கள். பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களையெல்லாம் சத்தம் போடாமல் விற்றும் வருகிறார்கள் என்கிறார்கள். மிக முக்கியமாக, கடந்த ஆறு மாதத்திற்குள் திருச்சியில் மட்டுமே இதுபோன்று பலகோடி மதிப்பிலான நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை விற்றுவிட்டார்கள் என்கிறார்கள். குறிப்பாக, மொராய் சிட்டியில் 300 கோடி மதிப்பிலான இடத்தை விற்றிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

லாஸ்ட் புல்லட் :

மொராய் சிட்டியில் விற்றதாக குறிப்பிடும் பினாமி சொத்து விவரம் மற்றும் திருச்சியில் இன்றளவும் சொகுசு வாழ்க்கையில் இருந்து வரும் தலைவர்களின் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

6 Comments
  1. Sathya says

    Solution enn… neomax

    1. Bala says

      தலையில் தூண்ட போட்டு போறதுதான் solution sir….

  2. Kkk says

    Angusam writers kadasi varai Neomax agent suna va vai vaichukittu irukka ventiyathu than….

    1. J.Thaveethuraj says

      தங்களது மின்னஞ்சல் முகவரி தவறானது என்று பதில் வருகிறது. சரியான மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து கலந்துரையாடுங்கள் நண்பரே. அலுவலக தொலைபேசி எண்: 9488842025 என்ற எண்ணில் தாராளமாக தொடர்புகொண்டு பேசலாம்.

  3. Subramani says

    இந்த 10 regional head இல்லாமல் மேலும் Trichy 1, Trichy 2 director Rajkumar தலைமையில் moraicity பணிகளை பார்த்துகொண்டு இருந்தவர். இவரின் கீழ் இருந்த RH, TH விவரம் இல்லை. அவர்களும் கடந்த 2023 ஆண்டு payment கொடுக்க முடியவில்லை என்பதால் Trichy 1 region உடன் இணைக்கபட்டர்கள்.

  4. Viswanathan Viswanathan says

    சார் வணக்கம் என் பெயர் விஸ்வநாதன் நான் நியேமேஸ்முதலிட்செய்துஇதுவரையுலும்எந்தசெட்டல்மட்செய்யவில்லைஎண்பணம்.500000.வரையில்.முதலிட்செய்துஉள்ளேன்.இராமநாதபுர.மாவட்டம்.திருவாடானைதாலுகாஎந்தசெட்ல்மண்டும்பண்னவில்லை

Leave A Reply

Your email address will not be published.