நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்!
எல்லைகளை பிரிக்கும் வெள்ளை கோடுகள்
பொதுவாக இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, எப்போதும் அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் நான் சொல்லப் போகும் இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. இங்கு கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின்றன கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ஆம் இந்த பெர்லி என்ற நகரம் நெதர்லாந்துக்கும் பெல்ஜியமிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இருநாட்டுக்கு இடையேயான எல்லை, வெறும் வெள்ளை கோடுகள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரில் இருக்கும் பல ஹோட்டல்கள், வீடுகள் இந்த கோட்டில் உள்ளது. இந்த எல்லைக்கோட்டின் பெரும் பகுதிகள் வீடுகளிலும் தெருக்களிலும் உள்ளன. அதாவது எல்லைகள் பிரிக்கும் போது, வீடுகளும் கூட வெள்ளைக்கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாதி பெல்ஜியத்திலும் மற்ற பாதி நெதர்லாதிலும் உள்ளது. நெதர்லாந்தில் தூங்கும் மக்கள் பெல்ஜியத்தில் விழிக்கிறார்கள். அந்த வகையில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த எல்லை கோடு 450 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது, இதில் 50 கிலோமீட்டருக்கும் அதிகமானவை பார்லே – நாசாவ் மற்றும் பார்லே – ஹெர்டாக் போன்ற நகரங்கள் வழியாக செல்கின்றன. 1830 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் தனி நாடாக பிரிந்தது. அந்த நேரத்தில் பல வீடுகள், கடைகள், தெருக்கள் எல்லாம் இந்த எல்லைக்கோட்டிற்கு இடைப்பட்ட இடத்திலேயே வந்துவிட்டன. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற சிக்கலும் எழுந்தது. அதற்கும் ஒரு முடிவு செய்யப்பட்டது. எல்லை கோடுகள் இருக்கும் வீடுகளின் வாசல்கள் எங்கு உள்ளதோ, அவர்கள் அந்த நாட்டு குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நகரில் எல்லாமே இரண்டாக இருக்கும் ஒரே நகருக்கு இரண்டு பெயர்கள், இரண்டு தபால் நிலையங்கள் என இரண்டாக இருக்கும். இந்த தனித்துவம் காரணமாக உலகம் முழுவதிலிருந்தும் இந்த இடம் பலரும் விரும்பக்கூடிய ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.