மு.க.ஸ்டாலின் அமைத்திருக்கும் அதிமுக அமைச்சரவை !
மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தொடர் முயற்சிக்கு பிறகு, மேலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது திமுக.
இன்று அமைச்சரவை பதவியேற்ற நிலையில் அமைச்சரவை தொடர்பாக திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரே கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.
ஆண்டாண்டு காலமாக திமுகவிற்கு உழைத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பேருக்கு அமைச்சர் என்ற வகையில், டம்மி துறைகளை மு.க.ஸ்டாலின் ஒதுக்கியிருக்கிறார் கூறுகிறார்கள்.
ஐ. பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை, ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற வளர்ச்சி என்ற துறைகள் ஒரே துறையாக இருந்த உள்ளாட்சித் துறையை இரண்டாக பிரித்து கே.என்.நேரு விற்கு நகர்ப்புற வளர்ச்சியை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும் கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு நீர்ப்பாசன துறையை ஒதுக்கி இருப்பது அவருடைய சீனியாரிட்டியை அவமதிப்பது போன்றது ஆகும் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த சேகர் பாபுவிற்கு இந்து சமய அறநிலையத்துறை, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீன் வளத்துறை, ரகுபதிக்கு சட்டத்துறை, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை, முத்துசாமிக்கு வீட்டு வசதித்துறை, ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறை, ஏ.வா. வேலுவுக்கு பொதுப்பணித்துறை, சமீபத்தில் கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை என்று அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி, மேலும் ஒரு படி சென்று அவர்களுக்கு முக்கியத் துறையை ஒதுக்கீடு செய்திருப்பது திமுகவின் முன்னணி நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
மேலும் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை புறக்கணித்து இருக்கிறார் என்று டெல்டா மாவட்ட உபிகள் கேள்வி எழுப்புகின்றனர்.