உள்ளாட்சியை கைப்பற்ற ஸ்டாலின் போட்ட பிளான் !

0

கே என் நேரு கால் வைத்த இடத்தில் எல்லாம் தன்னுடைய தனித்துவத்தை காட்டி விடுவது வழக்கம். மாநாடு என்றாலும் சரி, தேர்தல் வியூகம் என்றாலும் சரி, கே என் நேரு பாதை தனிப்பாதை என்று சொல்லலாம்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு பிரச்சாரம் பெரிய அளவில் மேற் கொள்ளவில்லை என்றாலும் நேருவின் செல்வாக்கில் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று திருநாவுக்கரசு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது முடிவடைந்து உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சியின் 9 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது திமுக. இவை அனைத்திற்கும் கே என் நேருவின் உழைப்பு மிகப் பெரியது என்று திருச்சி உடன்பிறப்புகள் மத்தியில் ஆரவாரம் காணப்படுகிறது.

இந்த நிலையில் கே. என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை ஓதுக்பட்டுள்ளது. இதன் மூலம் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுகவை வெற்றி பெற செய்ய நேருவின் முயற்சியை அதிகம் எதிர்பார்த்திருக்கிறார் ஸ்டாலின் என்று சென்னை அறிவாலய வட்டாரங்களால் செல்லப்படுக்கிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.