கே.என்.நேரு, அன்பில் மகேஸ் க்கு எதிராக  புது அணி ! இது புதுசா இருக்கே….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கே.என்.நேரு, அன்பில் மகேஸ்க்கு எதிராக  புது அணி ! இது புதுசா இருக்கே…

 

நான் சொன்னா நம்பமாட்டீங்க…தீபாவளி வந்து போனதுல இருந்து திருச்சியில் ஒரு ஹாட் டாக் இருக்கு. அது வேற ஒன்னும் இல்ல. குடமுருட்டி சேகரும், இனிக்கோ இருதயராஜ் முகத்துடன் வெளி வந்த தீபாவளி வாழ்த்து போஸ்டர் தான்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

அந்த போஸ்டர பாருங்க…முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, இன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வருங்கால… உதயநிதி ஸ்டாலின் படம் போட்ட போஸ்டருடன்…குடமுருட்டி சேகர் மற்றும் இனிக்கோ இருதயராஜ் படம் போட்ட போஸ்டர் தீபாவளி வாழ்த்துக்களுடன் திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில்  ஒட்டப்பட்டு இருந்தது.

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் க்கு எதிராக  புது அணி ! இது புதுசா இருக்கே...
கே.என்.நேரு, அன்பில் மகேஷ் க்கு எதிராக  புது அணி ! இது புதுசா இருக்கே…

 

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதிலென்ன புதுசா இருக்கு. இருக்கே. திருச்சி திமுகவில் இதுவரை வந்த போஸ்டர்களில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இல்லாத போஸ்டரை பார்க்க முடியாது. ஆனால் திருச்சியின் இரண்டு முக்கிய அமைச்சர்களையும் தவிர்த்து  குடமுருட்டி சேகர் புதிய வழியை ஏற்படுத்துகிறாரோ … என்ற கேள்வியை இந்த போஸ்டர் உருவாக்கி உள்ளது என்று உடன்பிறப்புகள் பேச வைத்துள்ளது என்பதில் உண்மை இருக்கிறது.

 

ஒரு பிளாஸ்பேக்…

குடமுருட்டி T சேகர்

 

குடமுருட்டி சேகர் 15 வருடத்திற்கு மேல் திமுக மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர். திருச்சியில் கலைஞர் அறிவாலம் கட்ட இடம் வாங்கி கொடுத்ததே குடமுருட்டி சேகர் தானாம் , ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கலைஞர் அறிவாலயம் கட்டிய விவகாரத்தில் துறையூர் டாக்டர் சீனிவாசன் கொடுத்த  நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கே.என்.நேருவுடன் வரிந்து கட்டி கொண்டு ஜெயில் வரை போனவர் குடமுருட்டி சேகர்.  அந்த வழக்கில் அனைவரும் அடுத்தடுத்த சில காலங்களில் ஜாமீனில் வெளி வந்துவிட்டனர். ஆனால் அதில் குடமுருட்டி சேகருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு அடுத்தடுத்து 16 வழக்குகள் 2 குணடாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 மாத சிறைவாசத்திற்கு பிறகு தான் அவர் வெளியில் வந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் 6 முறை குடமுருட்டி சேகரை நேரில் சிறையில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியதும் , உடல்நிலை சரியில்லாமல் கே.எம்.சி, இராமசந்திரா மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது நேரில் பார்த்து  குறிப்பிடத்தக்கது.

முதல்வரிடம் மனு கொடுத்த போது

இந்நிலையில்  தற்போது திமுக ஆட்சியில் இருக்கும் சூழலில் வழக்கை முடிப்பதற்காக கே.என்.நேரு,  துறையூர் டாக்டர் சீனிவாசனிடம் பேசி வழக்கை முடிக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் குடமுருட்டி சேகர்  தரப்போ, நான் அந்த வழக்கில் சிறை என்று மிகவும் சிரமப்பட்டேன். இப்போது கட்சியில் திட்டமிட்டு என்னை ஒதுக்கியும் விட்டார்.

எனக்கு எந்த ஒரு பதவியும் கொடுக்கவில்லை. அது என் மீது போடப்பட்ட பொய் கேஸ் தான்.. நான் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, அந்த டாக்டர் மீது புகார் கொடுத்து நீதிமன்றத்திலே வழக்கு நடத்திக்கொள்கிறேன்… வழக்கை குறுக்கு வழியில் முடிக்க கையேழுத்து போடமாட்டேன் என்று சொல்லி வருகிறாராம்..

இந்த தகவலால் கே.என்.நேரு தரப்பு அதிர்ச்சியடைந்து உள்ளார்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாநில இளைஞர் அணி பொறுப்பு வாங்கி முதன் முதலாக திருச்சிக்கு வந்த மகேஷ் பொய்யாமொழி வந்த போது அவரை வரவேற்று மகேஷ் கை ஓங்குவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்கள் குடமுருட்டிசேகர் , சீமானூர் பிரபு, ஜெவை எதிர்த்து போட்டியிட்ட சாந்தாபுரம் ஆனந்த், கொ,தங்கமணி மருங்கபுரி கே.சி.பி,  என்று இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

அவரும் முதல்முதலாக எம்எல்ஏ ஆன பிறகு அவர் சாதி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கே.என்.நேருவிடம் இருந்து வந்த அனைவரும் மீண்டும் அவரிடமே போய் விட்டனர். கொ. தங்கமணி மீண்டும் தேமுதிக சென்று விட்டார். ஆனால் குடமுருட்டி சேகர் மட்டுமே எஞ்சியிருந்தார்.

 

கே.என்.நேருவும், அன்பில் மகேஸை எதிர்க்க விரும்பாதால், அன்பில் மகேஸ் அவருடைய பெல்ட் (சாதிக்கு) வளர்ச்சிக்கு மட்டுமே உரம் போட்டு வளர்ப்பதாக தெரிகிறது.

அதற்கு உதாரணமாக திருச்சி மாநகராட்சி உறுப்பினர் மற்றும் பதவிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு  கிட்டதட்ட 25 பேர் அவர்கள்  அவரது பெல்ட் மட்டுமே நிரம்பி வழிகிறது என்கிறார்கள்.

 

கே.என்.நேரு - அன்பில் மகேஸ் - இனிகோ
கே.என்.நேரு – அன்பில் மகேஸ் – இனிகோ

 

அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மகேஷ் மந்திரியாக உயர்ந்து விட்டார். பின்னர் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளராக பரிமாணம் பெற்று விட்டார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை கே.என்.நேரு – அன்பில் மகேஸ் என்று இரண்டு தரப்பும் எதிரும்புதிருமாக இருந்தவர்கள்… தற்போது ஆட்சியும் அதிகாரம்  வந்தவுடன்… கே.என். நேருவும், அன்பில் மகேஷ் இருவரும் சேர்ந்து கைகோர்த்துக்கொண்டு,  கட்சியில் அடுத்த கட்டத்த வளர்ச்சி வருபவர்கள், கேள்வி கேட்பவர்கள்  , அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியில் பொறுப்பு வராமல் பார்த்து கொண்டனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குடமுருட்டிசேகர் தலைமையில் பலரை அணி சேர்ப்பதாக ஊரே செய்தி பரவி கொண்டிருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பெரிய தலைவலியை கொடுக்கும் என்கிறார்கள்…

இதற்கு இடையில் இரண்டு அமைச்சர்களின் விருப்பத்திற்கு மாறாக இடையே வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ்யை இரண்டு அமைச்சர்களும், பாரபட்சம் காட்டுவதால் கட்சியினர் மற்றும், அதிகாரிகள் அவரை பேச்சை கேட்பதே இல்லையாம், கட்சியினரும் அவரை தவிர்த்து போஸ்டர் அடிக்கிறார்களாம், இதை விட  அவரது தொகுதியில் சாலை போடுவதற்கு  அவரே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அப்படி போராட்டம் நடத்தியும் அவர் அலுவலகம் இருக்கும் சாலைக்கு கடைசியில் தான்  போட்டார்கள்….

குடமுருட்டி சேகர் - இனிகோ இருதயராஜ்
குடமுருட்டி சேகர் – இனிகோ இருதயராஜ்

 

இதனால் இனிக்கோவும், குடமுருட்டி சேகரும்  இணைந்து புதியதாக போஸ்டர் அரசியல் அச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

இனி என்ன நடக்குமோ..

 

திமுகவில் இருந்து குடமுருட்டி ஒதுக்கப்படுவரை அறிந்த பாஜகவில் சேர மேல்மட்டத்தில் இருந்து குடருட்டி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் பாஜகவில் ஜக்கியம் ஆக போகிறார் என்ற செய்தி பரவியது.

 

இதுகுறித்து குடமுருட்டி சேகருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, நான், திமுகவில் தற்போது…. பிஎச்டி படித்து கொண்டிருக்கிறேன்… பாஜகவில் போய் எல்கேசியா படிக்கமுடியும். என் இறுதி மூச்சு வரை திமுக தான். யார் என்ன சொன்னாலும் சரி, திருச்சியின் இருபெரும் தலைகள் என்னை ஒதுக்கினாலும் என் பயணம் என்றும் தலைவர் ஸ்டாலின் வழியில் இருப்பேன் என்று சொல்லிவருகிறார்…என்கிறார்கள்.

 

– ஆதிசிவன்

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.