புதுமணப்பெண் தற்கொலை ! ஐ.டி. ஊழியர் கைது !
சேலம் அம்மாபேட்டை சேர்ந்த நாகராஜ் சத்தியவதி மகள் மஞ்சு பிரியதர்ஷினி (27) என்பவருக்கும் திருச்சி மாவட்டம் உறையூர் சாய்ராம் விஜயலட்சுமியின் மகன் கமலக்கண்ணன் (35) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. கமலக்கண்ணன் சென்னையில் ஹெச் சி எல் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இதனால் புதுமண தம்பதிகள் சென்னையில் ஒட்டியம்பாக்க்கம் பகுதியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் திருமணமான மூன்றாவது மாதத்தில் கடந்த மே மாதம் மஞ்சு பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மஞ்சு பிரியதர்ஷினியின் பெற்றோர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கமலக்கண்ணனுக்கு கௌரி என்பவர் உடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்த மஞ்சு பிரியதர்ஷினி கணவர் கமலக்கண்ணனிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கௌரி உடனான தொடர்பை துண்டிக்க மஞ்சு பிரியதர்ஷினி வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த மஞ்சு பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டார். திருமணமான மூன்று மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிய மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கமலக்கண்ணனை பெரும்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.