தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியத் திட்டங்கள் அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களாகிய காய்கறிகள் மற்றும் பழவகை பயிர்கள் 32 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிகம் இலாபம் ஈட்டக்கூடிய இப்பயிர்களின் கீழ் உள்ள பரப்பை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் நிதியாண்டில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு மா, கொய்யா அடர்நடவு, எலுமிச்சை பரப்பு விரிவாக்கம், வாழை பரப்பு விரிவாக்கம், டிராகன் பழம் பரப்பு விரிவாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம் மற்றும் அத்தி பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம், உதிரி மலர்களாகிய மல்லிகை, சாமந்தி பரப்பு விரிவாக்கம், கிழங்கு வகை மலர்களகாகிய சம்மங்கி பரப்பு விரிவாக்கம், சுவைதாழிதப் பயிர்களாகிய மஞ்சள், சிவப்புமிளகாய் பரப்பு விரிவாக்கம், தேனீப்பெட்டி வழங்குதல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்க இலக்குகள் பெறப்பட்டுள்ளன. மழை நீரை வீணாக்காமல் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தி கொள்ள பண்ணைக் குட்டைகள் 20x20x3 மீட்டர் அளவில் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
எளியமுறையில் வெங்காய சேமிப்பு கிடங்கு 25 மெ.டன் கொள்ளளவில் அமைத்துக் கொள்வதற்கும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், நடமாடும் காய்கறி வண்டிகள் 50 சதவீத மானியத்தில் தயார் செய்து கொள்ள இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைப்படம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 மற்றும் வட்டாச்சியரிமிருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை http://tnhorticulture.tn.gov.in வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து மானியம் பெற்று பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப.. தெரிவித்துள்ளார்.