அங்குசம் சேனலில் இணைய

‘கார்களே இல்லை குதிரை வண்டிதான்’ – அமெரிக்காவின் தனித்துவமான தீவு!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நம்மிடம் ஒருவர் கார்கள் அதிகம் இருக்கும் நாடு எது என்று கேட்டால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்கா தான், ஆனால் அமெரிக்காவில் ஒரு பகுதியில் கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

மாக்கினாக் தீவு
மாக்கினாக் தீவு

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மாக்கினாக் தீவு, கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் அரிதான இடங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இதன்  இயற்கை அழகு, அமைதியான சூழல் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்த மாக்கினாக் தீவில் 1898 ஆம் ஆண்டு முதல் கார்கள் தடை செய்யப்பட்டன. கார்களால் ஏற்படும் இரைச்சல் மற்றும் மாசுபாட்டைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிதிவண்டிகள், குதிரை வண்டிகள் தான் இங்கு முக்கியப் போக்குவரத்து முறைகளாக உள்ளன. இந்த அம்சம் தீவை அமைதியான, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக மாற்றியுள்ளது. அதை தவிர்த்து தீவில் உள்ள 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாக்கினாக் கோட்டை, அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடமாக உள்ளது. தீவின் பசுமையான மிதிவண்டிப் பாதைகள், கடற்கரைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மாக்கினாக் தீவு
மாக்கினாக் தீவு

இந்த தீவின் குதிரை வண்டிகள் இங்கு முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த பாரம்பரிய வண்டிகளை பயன்படுத்தி தீவை சுற்றுகின்றனர். தீவின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உள்ளூர் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் பாரம்பரியத்தையும் நவீன வசதிகளையும் இணைத்து பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. இந்த தீவிற்கு நீங்கள் செல்ல நினைத்தால் மாக்கினாக் நகரம் அல்லது செயின்ட் இக்னேஸ் நகரத்திலிருந்து படகு மூலம் தீவுக்கு செல்லலாம். இந்த பயணம், தீவின் இயற்கை அழகை அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும். மாக்கினாக் தீவு, நவீன உலகின் பரபரப்பிலிருந்து விலகி, இயற்கை மற்றும் அமைதியான அனுபவத்தை தேடுவோருக்கு ஏற்ற இடமாக இருக்கும்.

 

 -மு. குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.