நோ காம்பரமைஸ் ! ஒன்லி ஆக்சன் !
நோ காம்பரமைஸ் ! ஒன்லி ஆக்சன் ! மதுரை மாநகரில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்படி, விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார் சங்கர் கணேஷ் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டிருந்தார்.
இம்முயற்சிக்கு கிடைத்த நல் பலனாக, காரியாப்பட்டி, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், மேலமாசிவீதி, வடக்கு மாசிவீதி ஆகிய பகுதிகளில் வழிப்பறி, செயின்பறிப்பு, மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட பூபதி, அப்பாஸ், பாலையா, விக்கி, அலாவுதீன், விக்னேஷ் குமார் ஆகியோரை பிடித்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக, அதிகாரிகள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் வரையில் சிபாரிசு பேசியதை கண்டிப்புடன் தவிர்த்த காவல் உதவி ஆணையர் சூரக்குமார், “நோ காம்ப்ரமைஸ் ஒன்லி ஆக்சன்” என கறாராக சொல்லி தவிர்த்திருக்கிறார். அவரது அதிரடியை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
“தற்போது கைது செய்து சிறையிலடைத்திருக்கிறோம். நீதிமன்றம் மூலம் நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவோம். இன்னும் கிடப்பில் உள்ள வழக்குகளில் தொடர்புடையவர்களையும் அடுத்தடுத்து கைது செய்வோம்” என்கிறார், உதவி ஆணையர் சூரக்குமார்.
– ஷாகுல் படங்கள் ஆனந்தன்