”தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை வைப்போருக்கு அறிவிப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், எதிர்வரும் 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் எரிபொருள் விதிகள் 2008-இன் கீழ் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விதி எண்.84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் 24.10.2024-ற்குள் விண்ணப்பிக்குமாறு செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது அரசிடமிருந்து வரப்பெற்ற செய்தி வெளியீட்டில், 19.10.2024-ற்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால்,

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனைக்கடை அமைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை19.10.2024-க்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதுஎனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.