வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2024 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு (+2)இ பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.06.2024 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.

தீபாவளி வாழ்த்துகள்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை.

அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

உதவித்தொகை
உதவித்தொகை

பொதுப்பிரிவினர்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed)                                            – ரூ.200/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (SSLC-Passed)                      – ரூ.300/-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed)      – ரூ.400/-
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE Passed)                     – ரூ.600/-

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்:

எழுதப்படிக்க தெரிந்த மற்றும்
பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு                                                  – ரூ.600/-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed)     – ரூ.750/-
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE Passed)                   – ரூ.1000/-

(சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதாந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.)

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளிஃகல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

விண்ணப்பதாரர் அரசுதுறை/தனியார் துறையிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.