“நியூட்ரிசன்” போட்டி வைத்தால் ஆப்பிள் Vs கொய்யா One to one fury இல் யார் ஜெயிப்பார் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆப்பிள் Vs கொய்யா

– Nutritional analysis
– Cost Benefit Analysis

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஆப்பிள்களின் பிறப்பிடம் –

மத்திய ஆசிய/ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்தவை அவை. நாம் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தானே. அதனால் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ளலாம். ஆப்பிள் நமது கண்டத்தின் பலம் என்று.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நாடு என்று பார்த்தால் நமது இந்தியாவின் வட மாநிலங்களான காஷ்மீர்/ ஹிமாச்சல் பிரதேசம் / உத்தரகாண்ட் போன்ற இமய மலையின் அடிவாரப்பகுதிகளிலும் சீனா, உடைந்த சோவியத் யூனியன் நாடுகள் , ஐரோப்பா போன்றவற்றில் விளைந்தவை ஆப்பிள்கள்.

இங்கிருந்து அமெரிக்க கண்டத்திற்கு சென்ற நம்முடைய பழம் ஆப்பிள்..

கொய்யா – தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது இன்னும் சொல்லப்போனால் மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அங்கிருந்து இங்கு வந்த பழம் அது.

கொய்யா நமது நேட்டிவ் கனியன்று. நான் எப்போதும் உண்ணும் விசயங்களில் “நேட்டிவிட்டி ” எல்லாம் பார்ப்பதில்லை. அதில் உள்ள “நியூட்ரிசன்” தான் நமக்கு வேண்டும்.

“யாதும் ஊரே யாருங் கேளிர்” என்று யோசிக்கும் நமக்கு எல்லைக்கோடுகள் அனைத்தும் துணி காயப்போடும் கம்பிகளாகத்தான் தெரிகின்றன. உண்மையில், மனிதன் உருவாக்கிய இந்த எல்லைக்கோடுகள் இயற்க்கை விதியை மீறுகின்றன. இதனால் தான் செயற்கையாக பசி/ பஞ்சம் / போர் உருவாக்கப்படுகின்றது.

சரி..விசயத்துக்கு வருவோம்..

“நியூட்ரிசன்” போட்டி வைத்தால்
ஆப்பிள் Vs கொய்யா
One to one fury இல் யார் ஜெயிப்பார்?

முதலில் ஆப்பிள்
100 gram ஆப்பிளில்
52 கலோரி சக்தி
14 gram மாவுச்சத்து அதில் 2.5 gram நார்ச்சத்து
புரதம் – 0.3gram

ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாது உப்பான பொட்டாசியம் 107 mg

ரத்த அழுத்தத்தை கூட்டும் உப்பான சோடியம் 1mg

விட்டமின் சி- 7% = 4.6 IU
விட்டமின் ஏ – 1% = 54 IU
மெக்னீசியம் = 5mg
பாஸ்பரஸ் = 11mg
விட்டமின் பி3 = 0.091mg
விட்டமின் ஈ = 0.18mg

இப்போது
கொய்யாவுக்கு வருவோம்..
100 gram கொய்யாவில்

68 கலோரி சக்தியும்

பொடாசியம் 417 mg
சோடியம் 2mg
மாவுச்சத்து 14 gram
அதில் நார்ச்சத்து 5gram
புரதம் 2.6 gram

விட்டமின் ஏ 12%= 624mg
விட்டமின் சி 380%= 228.3mg
கால்சியம் 1%
இரும்பு 1%
மெக்னீசியம் 5% =22mg
விட்டமின் பி6 5%
பாஸ்பரஸ் = 40mg
விட்டமின் ஈ = 0.73mg

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரத்த சர்க்கரை ஏற்றும் விதத்தை கணிக்கும் Glycemic Index வைத்து இரண்டையும் சோதிக்கும் போது

கொய்யா பழத்தின் Glycemic index – 32

ஆப்பிளின் Glycemic index – 38

இருப்பினும் இந்த இரண்டு பழங்களும் ரத்த சர்க்கரையை பெரிதாக ஏற்றாத Low glycemic பழங்களாக இருக்கின்றன.

நீங்கள் கூகுளில் எங்கு தேடினாலும் டயாபடிக் மக்கள் சாப்பிடக்கூடிய பழங்கள் லிஸ்ட்டில் – கொய்யா இடம்பெற்றிருக்காது.

ஆனால் பழங்களிலேயே மிகவும் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸ் கொண்ட பழம் – கொய்யா தான்.

மேற்கத்திய உலகில் உருவாக்கப்படும் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் கொய்யா விடுபட்டுவிடும்.

காரணம்.. அங்கெல்லாம் கொய்யா கிடையாது.

நான் கூட பேலியோ பரிந்துரைப்பில் கண்டதுண்டு. இந்தியா தவிர வேறு எங்கும் இத்தனை இலகுவாக கொய்யா பழம் ஈசியாக கிடைப்பதில்லை. அங்கு கிடைக்காத ஒரு பழத்தை எப்படி அவர்கள் எழுதுவார்கள்?

ஆனால் நம் ஊரில் எப்போதும் கிடைக்கும் இந்த பழத்தை நாம் நமது புத்தகங்களில் எழுத வேண்டும்.

அடுத்து economic / cost Vs benefit analysis செய்வோம்

ஒரு கிலோ கொய்யா – ரூபாய் 50/-

ஒரு கிலோ ஆப்பிள் – ரூபாய் 200 /-

கொய்யா பொருளாதார பேதமின்றி நம் அனைவருக்குமானது.

நான் தினமும் ஒரு கொய்யாகாய் உண்டு வருகிறேன்.
எங்கள் குடும்பத்தில் எப்போதும் கொய்யா காய் தான்.

கொய்யாக் காயை நாம் பேலியோவில் பரிந்துரைக்கிறோம். கொய்யா கனியை மெய்ண்டணண்ஸில் எடுக்கலாம்.

நீரிழிவு உள்ள வயதானவர்கள்/ பல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யாக்கனி சாப்பிடலாம் .

ஆப்பிள் போல
கொய்யாவிலும் நன்மை உண்டு

கொய்யா பழத்தை கொய்து உண்ண
இன்னும் தயக்கமேன்?

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.