அங்குசம் பார்வையில் ‘ஓஹோ எந்தன் பேபி’
தயாரிப்பு : ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’. டைரக்ஷன் ; கிருஷ்ணகுமார் ராமகுமார். ஆர்ட்டிஸ்ட்: ருத்ரா [ அறிமுகம்], மிதிலா பாஸ்கர், கஸ்தூரி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், டைரக்டர் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி. ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன், இசை : ஜென் மார்ட்டின், எடிட்டிங் : பிரணவ். தமிழ்நாடு ரிலீஸ் : ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
சினிமா தோன்றிய காலத்தில் தோன்றிய காதல் கதை தான். அதை இப்ப உள்ள டீன் ஏஜ்களுக்கு ஏத்த மாதிரி ‘மைக்ரோ ஓவன்’-ல் வைத்து தயாரித்துக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.
அதாவது பள்ளியில் படிக்கும் போது தன்னைவிட மூன்று வயது மூத்த ஒரு மாணவியை லல் பண்ணுகிறான் அஸ்வின். அவனின் வீட்டிற்கு எதிர்வீட்டிலிருக்கும் அந்த மாணவியும் இவனை லவ் பண்ண ஆரம்பித்ததுமே ஒரு நாள் இரவு மொட்டை மாடிக்கு கூப்பிட்டுப் போய், லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு, இவனை அணைத்து லிப்பாக் அடிக்கிறார். நம்ம அஸ்வினுக்கு ஜிவ்வுன்னு ஏறுது. திடீர்னு ஒரு நாள் அந்தப் புள்ளையின் அப்பா, அவளை அடிபின்ன ஆரம்பித்ததும், நான் அவனை லவ் பண்ணல, படிச்சு முடிச்சதும் நீங்க சொல்ற கிறிஸ்டோபரை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறாள். இதைக் கேட்டதும் கிர்ரடிக்குது அஸ்வினுக்கு. ‘இனிமே நீ என்னை அக்கான்னு [ வாட் ஏ லவ் மிராக்கிள்] தான் கூப்பிடணும்” எனச் சொல்லி நம்ம ஹீரோவுக்கு டாட்டா காட்டுகிறாள்.
படிப்பைவிட சினிமாவில் தான் விருப்பம் என்பதால் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக சேர்கிறான் அஸ்வின். இப்போது மீராவை [ நம்ம ஹீரோயின் மிதிலா பாஸ்கர்] காதலிக்கிறார். மீராவும் லிப்லாக் பண்ணுகிறாள். கூடவே தனக்கு ஒரு பாய் ஃபிரண்ட் இருப்பதாக சொன்னாலும் அஸ்வினின் நல்ல குணங்கள் இவளைக் காதலிக்க வைக்குது. ஆஸ்பத்திரியில் தனது அம்மாவைச் சேர்த்துவிட்டு, போன் பண்ணும் போது அஸ்வின் எடுக்காததால், ஆத்திரமாகி, அவனுடனன லவ்வை அத்துவிடுகிறார்.
சினிமாவில் டைரக்டராகியே தீர வேண்டும் என்ற வெறியில் இருக்கும் நம்ம ஹீரோ, சினிமா ஹீரோ விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகள் சொல்லி, ரிஜெக்ட் ஆனதால், தனது லவ் ஃபெயிலியர்ஸை சினிமாக் கதை போல சொல்லி இம்ப்ரஸ் பண்ணுகிறார். ”ஃப்ர்ஸ்ட் ஆஃப் ஓ.கே., செகண்ட் ஆஃப்ஃபை ரெடி பண்ணிட்டு வாங்க, கால்ஷீட் தர்றேன்” என்கிறார் விஷ்ணு விஷால். ‘இல்ல சார் இதான் க்ளைமாக்ஸ். ஏன்னா இது என்னோட வாழ்க்கையில நடந்த சம்பவங்கள்னு சொன்னதும் ஷாக்காகிறார் விஷ்ணுவிஷால்.
அதன் பின் நடக்கும் பல அடடே ஆச்சர்யக்குறி சம்பவங்களும் சில அயற்சிச் சம்பவங்களும் தான் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’.
அறிமுக நாயகானாக ருத்ரா மழுமழு ஷேவ் முகத்துடன் பள்ளி மாணவனாக, கொஞ்சம் தாடியுடன் உதவி இயக்குனராக, இரண்டு லவ்வும் பிரேக்கப் ஆனாலும் அதையே விஷ்ணு விஷாலிடம் கதையாக சொல்லும் இயக்குனராக என நடிப்பில் ”ஆஹா சபாஷ்” போட வைக்காவிட்டாலும் “ஓகே” போட வைக்கிறார். முதல் படத்தில் ஃபைட் இல்லேன்னா எப்படின்னு யோசித்திருப்பார் போல டைரக்டர் கிருஷ்ணகுமார் ராமகுமார். அதனால ஃப்ளாஷ்பேக்கில் மீண்டும் மிதிலா பாஸ்கரைப் பார்த்துவிட்டு வரும் போது, மிதிலாவின் பாய்ஃப்ரண்டுடன் லைட்டா ஒரு ஃபைட் வைத்திருக்கிறார்.
“நீ இவ்வளவு கேவலமா இருப்பேன்னு நினைக்கவேயில்ல. இனிமே என் வாழ்க்கையில வராதே” எனக் கொந்தளித்து கிளம்பும் போதும், பாய்ஃப்ரண்ட் ஒரு சீட்டிங் பார்ட்டி எனத் தெரிந்ததும் “நான் என்ன குப்பைத் தொட்டியா?” என தோழியிடம் குமுறும் போதும் நல்லாவே எக்ஸ்பிரஷன் காட்டியுள்ளார் மிதிலா பாஸ்கர். அந்த மொட்டை மாடியில் லிப்லாக் அடிச்சுட்டு, கேஷுவலா கழட்டிவிடும் அந்தப் புள்ள யாருப்பா..? மினி ஸ்கர்ட், ஓப்பன் ஷர்ட்டுன்னு சும்மா அள்ளுதுப்பா..
ருத்ராவின் அம்மாவாக கஸ்தூரி, சித்தப்பாவாக கருணாகரன், மிதிலாவின் அம்மாவாக கீதா கைலாசம் எல்லாம் ஓகே. தான் டைரக்டரே. மிதிலாவின் சைக்கோ சித்தப்பா கேரக்டரெல்லாம் வம்படியா திணிச்ச மாதிரி ஆகிப்போச்சு. டைரக்டராகவே நடித்திருக்கும் டைரக்டர் மிஷ்கின் வரும் சீன்கள் கலகலப்புக்கு க்யாரண்டி என்றால், ஹீரோவாக வரும் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவுக்காக பிஸ்னஸ் க்யாரண்டி தர உதவியிருக்கிறார். ருத்ரா-மிதிலா லவ் சக்சஸாக விஷ்ணுவிஷாலின் யூடியூப் பேட்டியை வச்சது டைரக்டர் கிருஷ்ணகுமார் ராமகுமாரின் டச். ஆனா க்ளைமாக்ஸில் பாம் பிளாஸ்ட் ஓவராகிப் போச்சு.
ஜென்மார்ட்டினின் இசையில் பாடலும் பின்னணி இசையும் ஓகே தான். எப்பா… ரெடின் கிங்ஸ்லி, இன்னும் எத்தனை வருசம், எத்தனை படங்கள்ப்பா அடித் தொண்டையிலிருந்து கத்துறதை பண்ணப்போற? எங்களால தாங்க முடியலப்பா. சட்டுப்புட்டுன்னு நிறுத்திட்டு வேற மாடுலேஷனுக்கு மாறுப்பா. இல்லேன்னா ரொம்ப கஷ்டம்பா..
‘ஓஹோ எந்தன் பேபி’ பாதி ‘லவ்’, மீதி ‘ஜவ்வு’.
— மதுரை மாறன்