பழைய பென்சன் திட்டம் வரவேற்பு! நன்றி தொிவிக்கும் தொழிற்சங்கங்கள்!
1995 இல் பணியிலிருந்து ஒய்வு பெற்று இன்று வரை பென்சன் வாங்கிக்கொண்டு சுயமரியாதையோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிற நிறைய பென்சனர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மாதம் 30 ஆம் தேதி பென்சன் கணக்கில் 30ஆயிரமோ, 40 ஆயிரமோ ஏறிவிடும் என்பது எவ்வளவு பெரிய நிம்மதி. ஒரு நிலையான பென்சன் என்பது ஒரு social security, ஒரு assurance. பழைய பென்சன் திட்டம் அந்த assurance ஐ கொடுத்திருந்தது, அதற்கடுத்து மத்திய அரசு திணித்த புதிய பென்சன் திட்டம் பென்சன் பணத்தை மார்க்கெட்டில் கொண்டு போய் முதலிடு செய்தது, அதாவது 75 வயது முதியவரின் பென்சன் Hindenberg போன்ற அறிக்கை வெளிவரும்போது, மார்க்கெட்டில் மிகப்பெரிய crisis வரும்போதோ மொத்தமாக ஒன்றுமில்லாமல் கூட போகலாம். 75 வயதில் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தை வைத்து வாழ வேண்டும் என்பதே எவ்வளவு பெரிய வன்முறை?
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் TAPS scheme இல் பென்சன் மார்க்கெட் linked ஆக இல்லாமல் ஒரு assured பென்சனை பற்றி பேசியிருக்கிறது. அதாவது மார்க்கெட் ஏறினாலும், இறங்கினாலும் ஒரு assured பென்சன் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
பென்சனை பற்றி அடிப்படை அறிவில்லாத பத்ரி சேஷாத்ரி போன்ற நபர்கள், finance influencer ஐ போல ஒரு மட்டமான calculation ஐ தூக்கிக்கொண்டு வருகிறார்கள். மார்க்கெட்டில் குறைந்தபட்சம் இவ்வளவு return கிடைக்கும் என்று சொல்கிறார்கள், 2055 இல் நீங்கள் சொல்கிற returns கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது.?
உத்திரவாதம் இல்லாத மார்க்கெட் linked பென்சன் எங்களுக்கு தேவையில்லை. உத்திரவாதம் இருக்கிற நிலையான பென்சன் வேண்டும் என்பதுதான் தொழிற்சங்கங்களின் அடிப்படையான கோரிக்கை. அதை தமிழ்நாடு அரசு சரியாக நிறைவேற்றியிருக்கிறது.
— ராகுல் பாஸ்கா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.