அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”கால்நடை பராமரிப்புத்துறை” சார்பாக – கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகளுக்கு மானியம்!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 2024-25 ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

2024-25-ம் ஆணடில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும்  ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண்களுக்கு ரூ.6 கோடியே 24 இலட்சத்து 20 ஆயிரம்  செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள்வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இத்திட்டத்தில்  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர்  மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட  பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

கால்நடை பராமரிப்புத்துறை
கால்நடை பராமரிப்புத்துறை

பயனாளி சொந்த செலவில் ரூ.3,200 செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

HARINI JEWELLERS TRICHY

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி இதற்கு முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம்  அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளோர் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச்சான்று நகல், கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது விதவை அல்லது வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியீடு

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.