ஆன்லைன்ல பார்ட் டைம் ஜாப் பார்க்க ஆசையா ? இதை படிங்க முதல்ல !
TELEGRAM TASK இன்றைய காலகட்டங்களில் பெண்கள் மற்றும் வேலை இல்லா படித்த பட்டதாரிகள் தனது மொபைல் போன்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்களில் வீட்டிலே இருந்து வேலை வாய்ப்புக்காக பல இணையதளங்களில் தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்திய இணையவழி குற்றவாளிகள் டெலிகிராம் டாஸ்க் எனப்படும் ஒரு விதமான MO வீட்டிலே இருந்து வேலை செய்யுங்கள் உட்கார்ந்த இடத்திலேயே எளிதாக சம்பாதிங்கள் என்று விளம்பரங்களை போடுகின்றனர்.
அதனை நம்பி அதனைப் பார்க்கும் இளைஞர்கள் அல்லது பெண்களிடம் யாரோ ஒரு அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ் அப் அல்லது இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஆகி டெலிகிராமில் ஒரு குழுவில் சேர்க்கப்படுகின்றனர். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களின் பார்ட் டைம் வேலை வாய்ப்புகளை தருமாறு பகுதி நேர அல்லது முழு நேர வேலை வாய்ப்பு உள்ளது அதில் அவர்கள் ஏதேனும் போஸ்டினை ரிவார்ட்ஸ் அல்லது ரேட்டிங் செய்தால் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று ஏமாற்றுகின்றனர்.
இதனை நம்பி இவ்வாறு உள்ள எளிதான வேலையை செய்து அடுத்த நிலையான கோல்ட் ப்ரீமியம் பல்வேறு படிநிலைகள் உள்ளது எனவும் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் முன் தொகை கட்ட வேண்டும் என்று சிறிது சிறிதாக பணத்தை பறிக்கின்றனர்.
மேலும் அது போலி என்று தெரிய வந்த பிறகும் அந்த பணத்தை திரும்ப கேட்டாலும் மேலும் சில பணத்தை அனுப்பினால் தான் திரும்பத் தருவோம் என்ற சைபர் மோசடி செய்கின்றனர். அதனை நம்பி பல லட்சக்கணக்கில் பணத்தினை முதலீடு செய்து ஏமாறுகின்றனர் இவ்வாறு வீட்டிலேயே உட்கார்ந்துபடியே வேலை தருமாறு அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை படித்த இளைஞர்கள் அல்லது வீட்டில் இருக்கும் பெண்களும் நம்பி ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் எச்சரிக்கிறது.