ஆன்-லைன் ரம்மி மசோதா மும்முனை தாக்குதல் ‘பகீர்’ பின்னணி !

0

தமிழ்நாடு சட்டமன்ற இயற்றிய 18 சட்ட மசோதாகளுக்கு ஆளுநர் இரவி ஒப்புதல் வழங்க மறுத்து கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதில் மிக முக்கியமான சட்ட மசோதா ஆன்-லைன் ரம்மியைத் தடை செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாவில் மேலும் சில திருத்தங்கள் வேண்டும் என்று சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அம் மசோதாவிற்குத் தேவைப்படும் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல்நாளில் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உடனே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றம் 2ஆவது முறையாக நிறைவேற்றும் மசோதாகளை ஆளுநர் நிராகரிக்கமுடியாது என்று அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளுநர் ஆன்-லைன் ரம்மி தடைச் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்தார்.

ஆளுனர் - தமிழக முதல்வர்
ஆளுனர் – தமிழக முதல்வர்
2 dhanalakshmi joseph

ஆளுநரின் வாக்குமூலம்

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுடன் ஆளுநர் கடந்த 5ஆம்ம நாள் உரையாடல் நடத்திய நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய ஆளுநர்,“ஆளுநரின் கையொப்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும் சட்டமசோதாகள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றால் அது நிராகரிக்கப்பட்டவிட்டது என்பதுதான் உண்மையான பொருள். நாகரிகம் கருதி கிடைப்பில் உள்ளது என்று கூறுகிறோம்” என்று உரையாற்றினார். அப்படியனால் ஆளுநர் ஒப்புதல் வேண்டி அனுப்பப்பட்ட 18க்கும் மேற்பட்ட சட்டமசோதாகள் உண்மையில் நிகரிக்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

- Advertisement -

- Advertisement -

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் கொந்தளிப்பு

சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானம் என்னவெனில், “சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படக்கூடாது என்ற விதி உள்ளது. அந்த விதி தளர்த்தப்பட்டு, ஆளுநரின் செயல்பாடுகள் ஆளும் அரசுக்கு இடையூறு தரும் விதத்தில் இருப்பின், ஆளுநரின் செயல்பாடுகளைச் சட்டமன்றம் விமர்சனம் செய்யலாம்” என்பதாகும். இந்த விதி தளர்வு தீர்மானம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் செயல்பாடுகளைத் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்கிறார் என்றும் நான் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கமாட்டேன் என்று  கோபம் கொப்பளிக்கவும்  உரையாற்றினார்.

பி.டி.ஆர்.
பி.டி.ஆர்.

நிதி அமைச்சரின் கிடுக்குபிடி கேள்விகள்

ஆளுநர் மாளிகை செலவினங்கள் குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்,“ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியில் ரூ.11 கோடிக்கு கணக்கு இல்லை. தேநீர் விருந்து என்று 30 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் செயலாகும். ஆளுநர் மாளிகை வரம்பு மீறி செலவு செய்யக்கூடாது. மேலும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வராமல் அட்சயா என்னும் தொண்டு நிறுவனத்திற்கு ஆளுநர் மாளிகை நன்கொடையாக 4 கோடி வழங்கியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் எப்படி மக்கள் வரிபணத்தை நன்கொடையாக வழங்கமுடியும்? இது குறித்து விரைவில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

அவை முன்னவரின் அறச்சீற்றம்

4 bismi svs

தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவை முன்னவர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகன் பேசும்போது,“பாஜகவின் கொள்கை பிடிக்கிறது. அதைத்தான் நடைமுறைப்படுத்துவேன் என்று ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்தால், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகி, RSS இயக்கத்தில் சேர்ந்து அரசியல் செய்யலாம். பாஜகவில் இணைந்து அக் கட்சிக்குப் பிரச்சாரம் செய்யலாம். ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு, மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆளுநர் அரசியல் சாசனம் சொல்வதன்படியே நடந்துகொள்ளவேண்டும். ஆளுநர் பதவியே வேண்டாம் என்பது எங்கள் கட்சியின் கொள்கை. அப் பதவி இருக்கிற வரையில் அதற்குரிய மரியாதையைத் தருவது எங்கள் கடமை என்பதை ஆளுநர் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆளுநர் அறிந்துகொள்ளவேண்டும்” என்று காட்டமாக ஆளுநரின் செயல்பாடுகள் மீது தன் கண்டத்தைப் பதிவு செய்தார்.

ஆளுநரின் ஒப்புதல்

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆளுநர் கையொப்பமிட்ட “ஆன்-லைன் ரம்மி தடை சட்டமசோதா சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 7ஆம் நாளே ஆளுநர் கையொப்பமிட்டுவிட்டார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கையொப்பமிடாமல் கிடப்பில் உள்ள சட்டமசோதாகளும் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மோடி, ஸ்டாலின் இரகசிய பேச்சு

முதல் அமைச்சர், நிதி அமைச்சர், அவை முன்னவர் என்ற மும்முனை தாக்குதலால் நிலைகுலைந்த ஆளுநர் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தந்தார் என்று சொல்லப்படுகின்றது. இதற்கு நேர்மாறாக முகநூலில் இதழ் ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில்,“கடந்த 7ஆம் நாள் சென்னை வந்த தலைமை அமைச்சர் மோடியை வழியனுப்ப வந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 நிமிடங்கள் விமானநிலையத்தில் மோடியுடன் பேசியுள்ளார். மேலும் புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அக் கடிதத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் நிபந்தனைகள்

இதனைப் படித்துப் பார்த்த மோடி, எல்லா மசோதாக்களுக்கும் ஆளுநரை ஒப்புதல் தரச் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியை உங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடுங்கள். திமுக பாஜகவை கடுமையாக இன்னும் கடுமையாகக்கூட விமர்சனம் செய்யுங்கள். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையை இழக்க நேரிட்டால் திமுக ஆதரவு தரவேண்டும். தேவை ஏற்பட்டால் பாஜக அரசில் பங்கெடுக்கவேண்டும் என்ற வகையில் மோடி, ஸ்டாலினிடம் நிபந்தனைகளை விதித்ததாகவும், அதற்கு ஸ்டாலின் ஒத்துக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில்தான் ஆளுநர் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளார். இப் பதிவின் உண்மை தன்மை ஆய்வுக்கு உட்பட்டதே என்றாலும் ஆளுநர் மோடியின் கைப்பாவையாக உள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

தமிழிசையும் - ரவியும்
தமிழிசையும் – ரவியும்

இரவியும் தமிழிசையும் ஒப்புதல்

தமிழ்நாடு ஆளுநர் இரவியைப் போலவே தெலுங்கனா ஆளுநர் தமிழிசையும் 3 மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் 2 ஆண்டுகள் காலம் கடத்தியுள்ளார். ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெலுங்கனா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணை தொடங்கும் நிலையில் ஆளுநர் தமிழிசை 3 மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். தெலுங்கனா ஆளுநர் உச்சநீதிமன்றத்திற்குப் பயந்து ஒப்புதல் தந்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் முதல் அமைச்சர் ஸ்டாலினின் எதிர்ப்புக்குப் பயந்து ஒப்புதல் தந்துள்ளார். ஆளுநர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதைத் தமிழ்நாடு இந்திய ஒன்றிய முழுமைக்கும் தெரிவித்துள்ளது என்பதே உண்மை

– ஆதவன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.