ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அரசிதழில் வெளியீடு அடுத்து என்ன நடக்கும்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – அரசிதழில் வெளியீடு

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

3

இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற அக்டோபர் 17-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியாகியுள்ளது.

4

*அதன்படி, செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும்.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.